பக்கம்:நாடகக் கலை 2.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

'கலைப்பண்பு என்பது தொழிற் பயிற்சியினுல் மட்டும் ஏற்படுவதென்று. உள்ள மலர்ச்சியின் பயனுய் ஏற்படும் ஒரு நிலையே கலைப்பண்பாகும். அந்நிலை ஆத்மீகத் தன்மை பொருந்தியது. ஐம்புல இன்ப நிலைக்கு அப்பாற்பட்டது” என ஓர் அறிஞர் கூறு. கின்ருர்.

அருளின் துணை வேண்டும்

கலை அறிவில்ை மட்டும் வளருவதன்று. அருளின் துணையும் வேண்டும். அறிவில்ை முயன்று அறத்தின் வழிச்சென்று அருளின் துணைகொண்டு ஆற்றும் கலைப்பணிகள்தாம் உலகில் நின்று நிலைபெற்று ஒளிர் கின்றன. பேராசிரியர் டாக்டர் மு. வரதராசனர் அவர்கள் இவ்வாறு கூறுகிருர்.

கலை மனத்தைப் பண்படுத்த உதவுவது. எங்கே னும் கலை மன அமைதியைக் கெடுத்துக் கவலையும் ஏக்கமும் பெருகுவதற்குக் காரணமாக இருக்குமானல் அங்கே மனிதன் விழிப்பாக இருக்க வேண்டும் உதவிக் கருவி எதிர்க்கும் கருவியாக மாறிவிடக் கூடாது. உண்ணும் உணவு உடலைக் கெடுக்கும் நஞ்சாகமாறக்கூடாது. எனவே கலை வழி அறவழி' என்பதைக் கலைஞன் என்றும் மறத்தல் கூடாது.

மகாகவியின் வாக்கு

மகா கவி பாரதியார் மகாத்மா காந்தியடிகளை வாழ்த்தும்போது தமது பாடலிலே போர்வழியைக் கொலை வழி யென்றும் அறவழியை அருங்கலை வழி' யென்றும் குறிப்பிடுகிருர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/126&oldid=1322497" இலிருந்து மீள்விக்கப்பட்டது