பக்கம்:நாடகக் கலை 2.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

அதிகமாக நடத்தத் தொடங்கிய பிறகு நாடகத்தில் பாட்டுக்கிருந்த முதன்மை குறைந்தது. நடிப்பு முதலிடம் பெற்றது. இப்போது நடைபெறும் நாடகங்களில் பாடல்கள் மிகக் குறைவு. மேனாடுகளைப் போல் முழுவதும் பாடல்களைக் கொண்டே நாடகங்கள் நடை பெறலாம். ஆனால், பாத்திரங்களே பாடினால் தான் நன்றாக இருக்கும். இன்றைய நாளைப் போல் இரவல் குரல் முறையெல்லாம் மேடைக்குச் சிறப்பைத் தராது.

நாடக நேரம்

பண்டைய நாளில் நாடகங்கள் இரவு 10 மணிக்குத் தொடங்கி, விடிந்து சூரியன் உதிக்கும் வரை நடத்தப் பெற்றன. நான் நாடகத் துறைக்கு வந்த போது இராமாயணம் ஒன்றுதான் விடியும் வரை நடந்தது. மற்ற நாடகங்கள் எல்லாம் இரவு 9-30 மணிக்குத் தொடங்கி ஐந்து மணி நேரம் நடைபெற்று இரவு 2-30 மணிக்கு முடிவு பெறும். பிறகு இந்த நிலை மாறி நான்கு மணி நேரமாகக் குறைந்தது. தற்சமயம் பெரும்பாலான நாடகங்கள் மூன்றரை மணி நேரம் நடைபெறுகின்றன. இதை இரண்டரை மணி நேரமாகக் குறைக்க முயன்று வருகிறோம்.

தமிழ் நாடக வரலாற்றைப்பற்றிச் சுருக்கமாகத் தான் உங்களுக்குச் சொன்னேன். இன்னும் விரிவாகச் சொல்ல எவ்வளவோ செய்திகள் இருக்கின்றன.

மேடையின் எதிர்காலம்

தமிழ் நாடக மேடைக்கு மகத்தான எதிர் காலம் இருக்கிறது. நல்ல முறையில் பயிற்சி பெற்ற எழுத்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகக்_கலை_2.pdf/68&oldid=1540645" இலிருந்து மீள்விக்கப்பட்டது