பக்கம்:நாடகங்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 அர : குலோத்துங்கன் உயிரையே விலையாகக் குறித்திருக்கிருள். கூத் : இதைக் கேட்டு, சிரிப்புக் கூட வரவில்லை. எனக்குச் சீற்றம் எப்படி பிறக்கும்? அர : நம் கொடியறுத்த கள்ளன் அவள் கையி லிருக்கிருன். கத் : அவன் ஆற்றலும் வீரமும் இருட்டிலும் மறைவிலுந்தானே! சபை நடுவே வரும் திறம் அவனுக்கேது: அர : நான் வணங்கும் தெய்வம், தங்களுக்கே அவளுடன் உறவென்ற பேச்சு... கூத் : இது என் நெஞ்சிலிட்ட நெருப்பு! அர உங்கட்கு பெயரிலே கூத்திருக்கிறது, அவள் கலையிலே கூத்திருக்கிறது எ ன் ப த ற் கு ச் சொன்னேன். கத் : இந்த மண்ணுக்குப் பகை என்ருல் என் ரத்த அணுக்களெல்லாம் கொதித்து எழும். விளையாட்டுக்கும் இனி அப்படிப் பேச வேண்டாம். அர மன்னிக்கவும், சிவஞானக் கிழவன் எப்படி இருக்கிருர்? கூத் : நம் தமிழ் ஞானத்தைச் சுமக்கத் தன் தலைக்கு வலுவில்லாமலிருக்கிரு.ர். அர : எழுத்தலங்காரம்? கூத் : என் பாட்டுக்குப் படி எடுக்கிருள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகங்கள்.pdf/54&oldid=781682" இலிருந்து மீள்விக்கப்பட்டது