உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாடகவியல்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

396 வி. கோ. சூரியகாராயண சாஸ்திரிபாரியற்றிய (இரண்டாம்

பின்னு ை நாடகத்தின் திேயா குணங்களே பெடுத்துக் கூறும் பின்னு சை, இன்ன ன பிறவும் ஆம் - இவைபோன்ற பிறவும் ஆகும், என்ன பேசி னர் பெரியோர் - என்று நாடக விலக்கணமுணர்ந்த அறிவான் மிக்கோர் கூறினர். -

குறிப்பு:-மேற்கூறிய வாழ்த்து முதலிய பகுதிகளின் இலக்கணத் 'தைப் பின்வார் வருஞ் குத்திரங்களான் ஆசிரியர் கிரலே விளக்குதலை யுணர்க. குணம் கேவில் என விசேடித்தமையான் பின்னுரையின்கண் பசதவாக்கிய மும் அடங்கு மெனலே யுய்த்துணரவைத்தனர். (+) (க) வாழ்த்து 175. எல்லாக் கான பிலகு மிறைவனே

வணங்கிடு முகத்தா னினங்கிய நாடகத் தலைமக்க டம்மையு நலமுற வணங்குதல் வாழ்த்தென வகுத்தனர் வடமொழி வல்லுநர். எல்லாம் தானுய் இலகும் இறைவனே வணங்கிடும் முகத்தான் - எப்பொருளுங் கானுக விளங்கும் கடவுளே வணங்குமுகமாக, இணங்கிய நாடகம் தலைமக்கள் தம்மையும் - எடுத்துக்கொண்ட நாடகத்திற் பொருங் திய தலைவன் தலைவியராகிய தலைமக்களையும், கலம் உற வணங்குதல் - நன்மை பொருந்த வணங்குதல், வாழ்த்து என வாழ்த்து என்று, வடமொழி வல்லுநர் - வடமொழி நாடக விலக்கணம் நன்குனர்ந்தோர், வகுத்தனர் - கூறினர். -

குறிப்பு:-இறைவன் - எல்லாப் பொருளிலுக் தங்குபவன்; இறுத் தல் - தங்குதல். இவ்வாழ்த்தினே வடாலார் காந்தி என்ப. நான்தி அரங்க வழிபாடாகும். இஃது அரங்கத்தின் அதிதேவதையாகிய சக்திதேவரைப்பற்றி கிகழ்தலின் காக்தியென்னும் பெயர்த்தாயது. படைப்புக் காலத்தில் இறைவன் அருட்கூத்து கிகழ்த்துங்கால் அப்பெருமானது சங்கற்ப மாத்திரையால் தந்தி தேவர் அரங்கமாக் தன்மை யெய்கினரென்ப. ஆதலின் அசங்கவழிபாடு நாந்தியென வழங்கலாயிற்று. இக்காரணம்பற்றி முற்காலத்திய நாடக அரங்கங்களில் நந்திதேவரின் உருவமைத்து வைப்பதும் நாடக நடிக்கத் தொடங்குமுன் குத்திரதான் முதலியோர் அதற்கு வழிபாடு செய்தலும் மரபாய் நிகழ்ந்துவந்தன. சுத்தானந்தப் பிரகாச முடையார் நாடக அாங்கின் இலக்கணங் கூறுமிடத்து,

'அாங்கி லுயாமு மக்லமு நீளமும் பொருந்த நாடி யுரைக்குங் காலைப் பூதரை யெழுதி மேனிலை வைத்து கந்தி யென்னும் தெய்வமு மமைத்து......" எனக் கூறியது ஈண்டறியம்பாலது. வல்லுநர் - ங் பெயரிடை கிலே. ஆசிரியர் தமது கலாவதி நாடகத்தில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடகவியல்.pdf/129&oldid=653491" இலிருந்து மீள்விக்கப்பட்டது