பக்கம்:நாடும் ஏடும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

"நாடும் ஏடும்"


தோழர்களே !


ங்களிடை இன்று எனது மதிப்பிற்குரியவரும், உங்கள் ஆசிரியரும் எனது முன்னாள் ஆசிரியருமான திரு. கந்தசாமி முதலியார் அவர்களை தலைமையில் பேசும் பெரும்பேறு வாய்த்தமைக்குப் பெரிதும் இறும்பூ தெய்துகின்றேன் மற்றும் நான் கல்வி கற்றுத் தேர்ந்த இதே பச்சையப்பன் கல்லூரி மாணவத் தோழர்களாகிய உங்களிடையே பேச நேர்ந்த இவ்வாய்ப்பை நினைத்தும் மகிழ்கின்றேன். இதுபற்றி மிகுதியம் பெருமை யடைகின்றேன். இவ்வாய்ப்பை எனக்களித்த இத்தமிழ்ச் சங்கத்தாருக்கு எனது மனமுவந்த நன்றி செலுத்த மிகவும் கடமைப்பட்டுள்ளேன். எனது நன்றி அவர்க்குரித்தாகுக!

ஏடு எது ?

நாடு மக்களால் நிறையப்பட்டிருக்கும் ஒன்று. ஏடு நாட்டு மக்களால் கற்கப்படுவது; கையாளப்படுவது; செய்யப்படுவது, போற்றப்படுவது. அந்தந்த நாட்டிலுள்ள ஏடுகளைப் பார்த்தால் அந்தந்த நாட்டு மக்களைப்பற்றி, நாகரிகத்தைப் பற்றி, வாழ்க்கை வளங்களைப்பற்றி, நாகரிகத்தைப் பற்றி பாங்குற எளிதாக, ஏமாற மார்க்க மின்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். ஆம்/ நாட்டிலுள்ள ஏடுகள், நாட்டில் உள்ளதை, நடப்பதை, மக்கள் வாழ்க்கை முறைகளை வகுத்துக் காட்டும் கண்ணாடியாகக் காட்சி யளிக்க வேண்டும். நாட்டு மக்களை மேன்மையுறச் செய்யும்

9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாடும்_ஏடும்.pdf/10&oldid=1547493" இலிருந்து மீள்விக்கப்பட்டது