உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாடும் நாடகமும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 சந்தனக் கிண்ணம் மருமகள்மீது ஏற்பட்ட கோபம் அவள் வலுவில் பேச வந்தாலும்; அதிகமாகப் பேசுவது கிடையாது, பால்யத் தோழி, பள்ளித்துணை, விஜயா அந்தக் கிண்ணத்திலே தன் கன்னத்தைக் காட்டிக் கமலாவைவிட்டு கிள்ளச் சொல்லிக் கொண்டே யிருந்தாள். கிண்ணத்திலே மின்னும் "விஜயா" என்ற எழுத்துக்கள் கமலாவிடம் எத்தனையோ பழங்கதைகளைச் சொல்லும். கமலாவும் கண்ணை மூடிக்கொண்டு அந்த இன்பக்கதைகளைக் கேட் பாள். திடீரென்று நாட்டிலே தீப்பொறி கிளம்பிற்று. தமிழை ஒழிக்கத் தருக்கர்கள் படை திரட்டினர். அதற்குத் தடைபோடத் தரணியாண்ட இனத்தவர் புறப் பட்டனர். வடநாட்டு இந்திமொழி ஏகாதிபத்யம் திராவி டத்திலே திணிக்கப்பட்டது. அதை எதிர்த்து மொழிப் போர் வீராவேசமாக மூண்டது. "மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை' என்ற கவிதையை முழக்கிய வாறு தமிழர் பட்டாளம் கிளம்பிற்று, சிங்கங்கள் சிறை புகுந்தன.சிசுக்களுடன் பல தமிழ்த்தாய்களை அடக்கு முறையின் கோரவாய் விழுங்கியது. மொழிகாக்கப்போன இருவர் - தாலமுத்து நடராசன் எனும் மாவீரர்கள்- தம் மூச்சைக்காக்க முடியாமல் ஆக்கப்பட்டனர் இந்தி வெறி யர்களால். தமிழகமெங்கும் கொதிப்பு, குமுறல், புயல்! கமலா பலகணி வழியாக வீதிப்புறத்தைப் பார்த்த படி நின்று கொண்டிருக்கிறாள். அவளுடைய கையிலே