24 24 ஆலமரத்துப் புறாக்கள் புறா விளக்கம்தர ஆரம்பித்து விட்டது. கரும் புறா வுக்கு ஒரே கோபம், வெட்கம் வேறு, வெண்புறா சிரிக் குமே என்று! 'அப்போதே சொன்னது அந்த வெண் புறா என்று அங்கலாய்த்துக் கொண்டது கரும்புறா. உனக்கு நான் உதவினேனே; நீயேன் எனக்கு உதவக்கூடாது" என்று கரும்புற அலகால் குத்தியது. தலை "யால் மோதியது. கலர்ப்புறாவும் தன் 'சக்தி' யைத் திரட்டி கரும்புறாவை எதிர்த்தது. இப்படி இரண் டும் ஒன்றோடொன்று அலகால் குத்தியும்,சிறகால் அடித்தும், ஆலமரத்தையே ஒரு குழப்பத்திற்கு ஆளாக்கி விட்டன வல்லூறோ தன் வேலையைப் பார்த்துக்கொண்டே யிருக்கிறது. வெண்புறா, இந்த விசித்திரத்தை நினைத்து அழுவதா சிரிப்பதா என்று தெரியாமல் விழிக்கிறது. ஆனாலும் எதிரியைத் தாக்க தன் பலத்தை வளர்த்துக் கொண்டே யிருக்கிறது. சில சில்லறை உதவிகளுக்காகவும், இடம் சுக மில்லா விட்டால் மருந்து கேட்கவும், கலர்ப்புறா, வெண் புறாவிடம் வரும். அந்த உதவிகளை வெண்புறா செய்யும். ஆனால் இப்போது அந்த உதவிகளைக்கூடகரும்புறா, கலர் புறாவுக்கு செய்வதில்லை. இந்தக் கதையைக் கேள்விப்பட்டு காட்டிலுள்ள பறவைகள் எல்லாம் சிரிக்கின்றன; ஆச்சர்யப்படுகின்றன அதே நேரத்தில் வெண்புருவின் அறிவுத்திறனைக் கண்டு பாராட்டி, புகழ்ந்திடவும்செய்கின்றன: பாராட்டையும் புகழ்ச்சியையும் கேட்கவா வெண்புறாவுக்கு நேரம் ! அத னுடைய லட்சியமெல்லாம் வல்லுறை விரட்டுவது தான் !
பக்கம்:நாடும் நாடகமும்.pdf/24
Appearance