உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாடும் நாடகமும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. கருணாநிதி 27 பற்றிக் கவலைப் படப்போகிறவரில்லை, அவருக்கு வேண் டியதெல்லாம் உயர்ந்த பதவி. அவர் உயர்ந்த பதவி யென்று கருதுவதெல்லாம் நகரசபைத் தலைவர் பதவி தான். ஆகவே, யார் பக்கம் பொதுமக்கள் இருந்தாலும், புகழ் தேங்கி இருந்தாலும் அவர் கவலைப்படுவதில்லை. தேர்தல் நேரத்திலே பொது மக்களின் ஏஜண்டை கைக் குள் போட்டுக்கொண்டால் போதும் என்று எண்ணு கிறவர். அதற்கென்ன, அதிக சிரமமா வேண்டும்? பணத் தால் அடித்தால் சுருண்டு விழக்கூடிய பொதுநலவாதி புண்யகோடி பக்கத்திலே இருக்கும்போது! அந்தரங்கத்திலே அந்தஸ்து படைத்தவர்களின் அடிமையாகவும், அம்பலத்திலே பொதுநலத்தொண்ட ராகவும் புண்யகோடி உலவிக் கொண்டிருந்தார். ஆகா, எவ்வளவு நல்ல மனிதரப்பா ! ஏழைகள் துடித்தால் அவரும் துடிக்கிறாரே! அவரல்லவா ஏழை பங்காளர்" என்று ஏற்றிப்போற்றினர், குடிசைவீட்டுக் காரர்கள். "பிராமணாளிடத்திலே எத்துணை அன்பு ! பக்த னென்றால் அவரல்லவோ பக்தர்! என்று பராட்டி மகிழ்ந்தது, பார்ப்பனச்சேரி. - ஆற்றிலே வெள்ளம் அணைபோட மக்கள் பட் டாளம் திரளும். உழைப்பார்கள், யார்யாரோ ! நகரசபை, பணம் செலவழிக்கும். அங்கே தளபதியாக நின்று அதி காரக்குரல் எழுப்புவார். நமது புண்யகோடி. தேகம் வாடாமல் - வியர்வை சிந்தமால்- 'ஆற்று வெள்ளத் தைத் தடுக்க தலைவன் புண்யகோடி' என்ற என்ற பட் டத்தை சுலபமாகப் பெற்றுக்கொண்டு போய்விடுவார்.