மு. கருணாநிதி 29 புதிய கட்டிடத்தின் திறப்புவிழா நடைபெற்றது. திறப்புவிழாவிலே தற்காலிக அலுவலகத்திற்கு தன் வீட்டைத் தாராளமாகத் தந்த தந்தை புண்யகோடி என்று வாழ்த்திப் போற்றினார்கள், நகர சபையார்- விழாத் தலைவர் -விரிவுரையாளர்கள் - அனைவருமே! பெயர் வந்து விட்டது. பொதுமக்கள் அரங்கிலே புண்யகோடிக்கு நல்ல இனி அவருக்கு வேண்டியது பணமல்லவா? அதுதானே புண்யகோடியின் இலட்சியம். அதற்கான முயற்சியிலே ஈடுபட்டார். நகரசபைக்கு ஒரு ரகசிய விண்ணப்பம் அனுப்பினார். அதில், "என் சொந்த வேலைகளைக்கூட கவனியாமல்-என் சொந்த வசதிகளைக்கூட எதிர்பார்க்காமல் நகரசபைக் காக - பலர் எதிர்த்துங்கூட பொருட்படுத்தாமல் -என் வீட்டை அலுவலகத்திற்கென இதுவரை கொடுத்திருந் தேன். அதனால் என் வீட்டிலே ஏற்பட்டிருக்கிற பழுது களை மீண்டும் புதுப்பிக்க பத்தாயிரம் ரூபாய் தேவைப் படுகிறது. அந்தப் பத்தாயிரத்தை எனக்கு நஷ்டஈடாகத் தரும்படியாகக் கேட்டுக் கொள்கிறேன்." என்பதாகக் குறிப்பிட்டிருந்தார் அந்த விண்ணப்பம் நகரசபைத் தலைவரின் பார்வைக்குப் போவதற்கு முன்பே நகரசபைத் தலைவர் வெள்ளையப்பர், தேர்தல் வேலைகளிலே ஈடுபட வேண்டியதாயிற்று, பலத்த போட்டி. பணம் நீராக ஓடியது. முடிவு பரிதகபகரமாக மாறிவிட்டது. வெள்ளையப்பர் கௌன்சிலராகக்கூட வர முடியவில்லை ! புண்யகோடிக்கு உள்ள வருத்தமெல்லாம் அந்தப் பத்தாயிரம் வரவேண்டியது போய்விட்டதே என்பது தான்.
பக்கம்:நாடும் நாடகமும்.pdf/29
Appearance