உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாடும் நாடகமும்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

國 பதிப்புரை தோழர் மு. கருணாநிதியை பேச்சு மேடை யில் காண்போர் — அவரது பேச்சைக் கேட் போர் - ஒரு எழுச்சியுள்ள நாடகத்தை அனு பவிப்பதாகவே கருதுவார்கள். மேடையில் கூறும் அரசியல் சம்பவங்களாயினும் சரி : அவதிப்படுவோர் பற்றிய செய்திகளாயினும் சரி: கிண்டல் நிகழ்ச்சிகளாயினும் சரி; அத் தனையும் எதிரே காணுகிற காட்சிகளாக சித்தரித்து...... விஷயத்தில் சம்பந்தப்பட்ட வர்களை பாத்திரங்களாக்கி ஒரு சிறு நாடக மாகவே ஆக்கிவிடுவார். ஆக அவருடைய பேச்சு முடிவதற்குள் மக்கள் மனக்கண்ணால் பல உண்மைகளை நாடக உருவில் கண்டு உணர்ச்சிபெறுவர். அதே முறை அவருடைய சிறுகதைகளிலும் பெறும்பாலும் கடைப் பிடிக்கப்படுகிறது. சரித்திர உண்மைகளை, சமுதாயக் கீறல்களை, நாட கபாணியில் நறுக்குத் தெரிக்கும் வார்த்தைகளை யமைத்து விளக்கிக்