உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாடும் நாடகமும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 தொத்துக் கிளி இந்தக் கன்னி கல்லூரியிலேதான் சிக்கினாள்- அண்ணாமலையிடம்! அவனுடைய அழகை ரசிக்கும் தன்மைக்கு இரையானாள், விமலா! விமலாவின் மனோ நிலையை அறியாது அழகி வேட்டையாடுகிறான் அண்ணாமலை! ஆனால் அவன் ஒரு குண்டுமல்லிகையை முகர்ந்து கொண்டிருக்கும் போதே மற்றொரு ரோஜா வுக்கு ஆசைப்பட்டான். அங்கேதான் அண்ணாமலை ஒரு பெருத்த கொலை செய்துவிட்டான். ஆம்! அந்த மலரைக் கசச்சிவிட்டான். பாவம்! விமலா கெடுக்கப்பட்டாள். இன்னும் ஒன்பது மாதத்தில் அவள் ஒரு குழந்தைக்கு தாயாகி விடுவாள். இப்போது அண்ணாமலை விமலாவைப் பற்றிக் கவலைப் படுவதில்லை. அவனுக்குத்தான் எத்தனையோ விமலாக்கள் 'சந்தை'யிலே கிடைக்கிறார்களே ! விமலா அழுதாள் : புரண்டாள் ! ஆனால், பலன்....? அண்ணாமலை அவளைத் திரும்பியே பார்ப்பதில்லை. வகுப்பு முடிந்ததும் அவளைப் பார்க்காமலேயே எழுந்து சென்றுவிடுவான், வேறொரு பக்கமாக! கிளி பாய்வதில்லையா மரத்துக்கு மரம் ! எந்த மரம் பச்சையாக இருக்கிறதோ, எந்த மரத்தில் அதிகமாகப் பழங்கள் இருக்கின்றனவோ அந்த மரத்துக்குத்தான் தாவும் பச்சைக் கிளி. அண்ணாமலையும் அப்படித்தான்! அவன் அழகியாகப் பார்த்துத் தாவுகிறான். அவன் ஒரு தொத்துக் கிளி ! அந்த மரம் அல்லவா முன்பே ஆராய்ந்து தெளிய வேண்டும், அது நிரந்தரமாகத் தங்கக்கூடிய கிளியாவென்று! எண்ணத் தவறினாள் விமலா! அதோ, அவதிப்படுகிறாள்.