உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாடும் நாடகமும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 தொத்துக் கிளி பட்டது. அவள் கையிலே ஒரு பாட்டில் இருந்தது. விமலாவை மாணவர் யாரும் கவனிக்கவில்லை. விமலா பாட்டிலை மெதுவாகத் திறந்தாள். கொஞ்சம் தயங்கினாள். நெருப்புக் குழியில் விழப்போகுமுன் அணலைக் கண்டு அஞ்சலாமா ? கடலிலே குதிக்கத் தீர்மானித்தபின் அலையைக் கண்டா மனங் குலைவது? பாட்டிலில் உள்ளதை அண்ணாமலையின் முகத்திலே கொட்டினாள். 'ஆ' வென்று று அலறிவிழுந்தான் அண்ணாமலை. அவன் முகத்திலே கடுகு தானிக்கப் பட்டது. அதே சமயத்தில் விமலாவும் கீழே சுருண்டு விழுந்தாள். ஆம்! அண்ணாமலை முகத்திலே விமலா அக்கினித் திராவகத்தைக் கொண்டினாள், அவன் அழகு மடிவதற்காக. அவளும் குடித்துவிட்டாள், அறுபடும் அளவுக்கு அக்கினி திராவகத்தை ! - குடல் கெமிஸ்ட்ரி ஆய்வுக்கூடத்தில் ஒருத்தி இந்த உலகி லிருந்து விடுதலை பெற்றுக்கொண்டிருந்தாள். ஒருவன் தாமரையன்ன முகமுடையோன் - தன் அழகினால் அழகி களைக் கெடுத்த அண்ணாமலை -குரூபியாக்கட்பட்டுகீழே கிடந்தான். இனி அவனைப் பெண்ணினம் திரும்பியே பநர்க்காது: உதைத்துத் தள்ளிவிடும். அவன் எல்லா மாணவர்களுக்கும் ஒன்றும் விளங்கவில்லை; திகைத்துப் போனார்கள். அந்தத் தொத்துக்கிளி அண்ணா மலைக்கு மட்டும் தெரியும் அந்தக் காரணம். முன்னே புதுவைப்புரட்சிக் கவிஞர் சிரித்தபடி நின்றார். அவர் உதடு அசைந்தது. "செல்வப் பிள்ளாய்! இன்று புவியில் பெண்கள் சிறுநிலையில் இருக்கவில்லை; விழித்துக் கொண்டனர், விளையாட நினைத்துவிட்டாய் ஊர்ப்பெண் கள் மேல்! பொல்லாத மானிடனே, மனச்சான்றுக்குள் புகுந்து கொள்வாய் ! நிற்காதே ! " கவிஞர் மறைந்து விட்டார், அண்ணாமலை கண்களை இறுக மூடிக்கொண் டான், எரிச்சல் தாங்க மாட்டாமல்.