மு.கருணாநிதி 41 உம் நாடக மேடை வாய்ப்பு எனக்கு கிட்டுமோ ! எனக்கு எட்டுமோ ! தர்பார் காட்சியில் சாமரம் ஏந்தி னாலும் சரி; உன் பாட்டொலிக்கும் அரங்கில் அரிதாரம் பூசி நின்றேன் அடியேன் என்ற புகழ் வந்தால் போதும்; புண்ணியனே ! கண்ணியனே! புலியே! சிங்கமே ! புனிதனே! பொற்புடன் எனக்கோர் புதுப்பணி தரு வீர்! வணக்கம், வணங்காமுடி இப்படி ஒரு தாள் ! திரையுலக ஜோதியே ! ஆதியே ! நீதியே ! வீதியே கதியென்று கிடக்கும் இந்த வீணன் கலையுலகில் காலெடுத்து வைக்க கனவுகாண்கிறான். கடலில் செல்ல கட்டுமரம் வேண்டுமென்பார்கள். காசாசைக்காக அல்ல; கலையுலகத்துக்குப் பணிபுரிய - அதுவும் உன் கவிதைகளைப் பாடி தொண்டாற்ற -தோழனே ! தொல்லைப்படும் நான் எல்லையில்லா ஆவல் கொள்கிறேன் துணை புரிவாய்! இங்ஙனம் தூயமணி" இப்படி ஒரு அஞ்சல் ! = ஏழைகளைப்பற்றி எழுதும் என் அய்யனே ! என் கதை சோகம் நிறைந்தது! எனக்கோர் வழிகாட்டு! ' நாடகத்தில் ஒரு வேடம்' திரையுலகில் ஒரு காட்சி " நீ எழுதும் ஏட்டினிலே ஒரு வாய்ப்பு" "பணமல்ல எனக்குத் தேவை ! பணிபுரிவேன் கலைத்துறைக்கு ! " "உன் பாடலை என் வாயால் பாடவேண்டும் " "சரியென்று சொல்! இல்லையேல் என் சாவை ஏற்றுக்கொள் ! ”
பக்கம்:நாடும் நாடகமும்.pdf/41
Appearance