தெருக்கூத்து காட்சி-1 வளமை குலுங்கிடும் வயற்காடுகள், பொன் முத்துக்களைச் சுமந்து நிற்கும் நெற்றாட்களின்மீது கதிர வனின் ஒளிபட்டு ஜரிகையென மின்னுகின்றன. வயலின் பக்கத்தேயுள்ள பசும் புற்றரைகளில் கொழுத்த பசுக் களும், அவைகளோடு கொஞ்சிக் குறும்பு விளைக்கும் கொழுந்துக் கன்றுகளும் காட்சி தருகின்றன. - மலர்களிலே பனி தூங்க-கனி தாங்கியபடி மரங் கள் நின்றிட-தோகை விரித்த மயிலும் துள்ளியாடும் மானும் - கானமெழுப்பும் குயிலும் களிநடம் புரியும் சிறுமியரும் எழிலூட்டிட சோலைகள் காட்சி வழங்கு கின்றன. எங்கிருந்தோ ஒரு தேன்குரல் கிளம்புகிறது. குயில் கவனிக்கறது, வாயடைத்துப் போய் ! மயில் ஆடாமல் நின்று விட்டது, மயக்கத்தால் ! மானும் மழலை மொழி யினரும் குரல் வந்த திக்கு நோக்கி திறந்த கண்ணை மூடாமல் நிற்கின்றனர். " சிங்கமும் மானும் உலவுங்காடு செந்தமிழ்த் திருநாடு. எங்கும் இல்லையே இதற்கொரு நாடு இந்த உலகினில் ஈடு..........!!!" இசையை முன்னே அனுப்பி தொடர்ந்து வந்தாள் மேடைக்கு. அந்த துள்ளும் இளமை அள்ளும் அழகு
பக்கம்:நாடும் நாடகமும்.pdf/44
Appearance