46 தெருக்கூத்து வீரன் கையிலே வில்லையும், மீன் வடிவ அம்புப் பேழையையும் தந்தான். வீரனும் புன்னகை நீட்டி பெற்றுக்கொண்டான். கிழவன்: திராவிட வீரனே! திண்தோளனே! ஆகாகா! உன்னைப்பார்க்க உலகப்பனாகிய நான் செய்த பேறு பெரும் பேறு! ஒரு கையிலே வில் ! ஒரு கையிலே புலி! தோளிலே மீன் வடிவ அப்புப் பேழை ! புலி - வில்-கயல் கொண்ட வீரனே.... இதோ என் மகள் தமிழ் என்னும் பொன்னார் மேனியளை உனக்களிக்கிறேன்-- வாழ்க நீவிர் வளமெலாம் பெற்று! உடனே மான்மயில் நடனம் ஆரம்பமாகிறது. மழலைக் குழந்தைகள் குதிக்கின்றனர், உற்சாக மிகுதி யால். குயில் கூவுகிறது. மலர்கள் அவர்கள் கழுத்தில் மாலைகளாக மாறிவிடுகின்றன. "வாழ்க வாழ்கவே வலிவுமிக்க வீரர் வாழ்கவே! வளமை கொண்ட தமிழை வாழ்வில் துணையாக் கொண்ட வீரர் வாழ்கவே!" காட்சி 2 (காட்சி முடிகிறது] அழகான மாளிகை. அங்கே மூன்று அரசிருக்கை கள். வானத்தையே கூரையாக்கிவிட்டனரோ என வியக்கும் வண்ணம் வைரங்கள் பதித்த அந்த அத்தாணி மண்டபத்திலே அமைச்சரும், ஆட்சி அலுவலரும் அமர்ந்திருக்கிறார்கள். பாண்டிய மன்னன் பாடிக் கொண்டே மேடைக்கு வருகிறான். இல்லை இல்லை கொலுமண்டபத்திற்கு வருகிறான்.
பக்கம்:நாடும் நாடகமும்.pdf/46
Appearance