பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i iO நாடோடி இலக்கியம்

கடைசியில் குடமும் கீழே விழுந்து உடைந்து போகிறது. . என்றைக்காவது ஒரு நாள் உடைந்து போவதுதான். உடைவதற்குள்ளே, நம்மாலான முயற்சிசெய்து சில பூச் செடிகளுக்காவது நீர் விட்டிருக்கலாமே!’

இப்படிச் சிந்தனை கிளர்ந்து எழுகிறது. புத்தகங் களில் வேதாந்தத்தைப் படித்த அறிவாளிகளுக்கு இந்தச் சிந்தனை விரிவடைந்து, மேற்கோளுடன் நெஞ்சில் இடம் பெறுகிறது. பரதேசி தன் பாட்டுக்கு ஒரு கவளம் சோற்றைப் பெற்றுக்கொண்டு அடுத்த வீட்டுக்குப் போய்விடுகிருன்.

இந்த மாதிரி பல வகையான பாடல்கள் இருக்கின் றன. வெளிப்படையாக அர்த்தம் விளங்காமல் மறை பொருளை உடைய பாடல்கள் பல. சித்தர் பாடல் களென்று வழங்குவன எல்லாம் இந்த வகையைச் சேர்ந் தனவே. இடைக்காட்டுச் சித்தர், பாம்பாட்டிச் சித்தர், கடுவெளிச் சித்தரென்று சொல்கிறவர்களெல்லாம் அஷ்டமாசித்தி கைவந்த சித்தர்கள் என்று நினைக்க வேண்டாம். அப்படி அவர்கள் உண்மையில் இருந்தார் களென்று வைத்துக் கொண்டாலும், அவர்களுக்கும் அவர்கள் பெயரால் வழங்கும் பாடல்களுக்கும் சம்பந்தம் இல்லை. பரதேசிகள் பல காலமாக ஞானமார்க்கமாகப் பாடிய பாடல்களே அவை. அவற்றை இயற்றிய புலவன் யாரோ ஒரு பரதேசி: அல்லது பரதேசிகளுடன் நெருங்கிப் பழகுபவன். . . . .

இந்த உடம்பை எத்தனை விதமாக எவ்வளவு விசித்திரமாக அந்தப் பரதேசிகள் வருணிக்கிரு.ர்கள் தெரியுமா? . r -

காய மேயிது பொய்யடா

காற்ற டைத்த பையடா மாயனர் குயவன் செய்த

மண்ணு பாண்டம் ஒடடா.