பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 நாடோடி இலக்கியம்

சித்திரப் பதுமையிது சிங்காரக் கோயிலிது மற்றப் பதுமையெல்லாம் - தங்கமே மட்டிப் பதுமையடி-ஞானத் தங்கமே

மட்டிப் பதுமையடி . காற்றைப் பிடித்துக் கரகத்தில் அடைத்ததுபோல் ஊற்றைச் சடலத்துள்ளே - தங்கமே உயிர்கின் றுலாவுதடி - ஞானத் தங்கமே

உயிர்ரின் றுலாவுதடி.

இந்த உடலுக்கு எவ்வளவு காலம் கெளரவமென் பதை அவர் நினைவுறுத்துகிரு.ர்.

சாகுபடிக் கோட்டையிலே சந்தைக்காரன் பேட்டையிலே

ஏகஜனக் கூட்டமடி - தங்கமே ஏமன் வந்தால் ஓட்டமடி - ஞானத்தங்கமே

ஏமன் வந்தால் ஓட்டமடி. ஆடை நமக்கிரவல் அணிந்ததெல் லாமிரவல் - பாடையும் இரவலடி - தங்கமே

பறையனைச் சேருமடி - ஞானத்தங்கமே

பறையனைச் சேருமடி. . . . . . . . . . . * * * அந்தப் பிணத்தை அலங்காரஞ் செய்து.

இந்தப் பிணங்களெல்லாம் - தங்கமே ஏதுக் கழுகுதடி -ஞானத்தங்கமே

ஏதுக் கழுகுதடி. செத்த பிணத்தைச் சீராயலங்கரித்துச்

சாகும் பிணங்களெல்லாம் - தங்கமே சாய்ந்து விழுகுதடி - ஞானத் தங்கமே

சாய்ந்து விழுகுதடி.