பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 சங்கடங்கள்

ஏழைப் பிச்சைக்காரன் நாள்தோறும் பிச்சை வாங்கிப் பிழைக்கிருன். ஏதோ தனக்குத் தெரிந்த பாட்டைப் பாடிக்கொண்டு நாலு வீதிக்குப் போய்ப் பிச்சை எடுத்துக் கிடைத்த அரிசியைப் பொங்கித் தின்று: தன்னுடைய வாழ் நாட்களை ஒவ்வொன்ருக எண்ணிக் கொண்டு காலம் கடத்துகிருன். தர்மம் செய்வதென்பது இந்த நாட்டு மண்ளுேடு பிறந்த இயல்பு. ஆகையால் அவன் பிச்சை கேட்கும்போது இல்லையென்னமல் பிடி யரிசி போடும் தாய்மார்கள் இருக்கிருர்கள். கடைக்குப் போய்ப் பிச்சை கேட்டால் இரண்டு மிளகாயோ, உப்புக் கல்லோ, புளியோ, கொஞ்சம் பருப்போ கடைக்காரர்கள் தருகிருர்கள். கிடைத்த ஒரு காசு அரைக் காசுக் கு. ஒரு நெருப்புப்பெட்டி வாங்கி வைத்துக்கொள்கிருன். ஏதோ ஒருவிதமாக அரிசியைச் சோருக்கிக் குழப்பி வயிற்றுக் குழியை ஒரு நாளைக்கு நிரப்பிக்கொள்கிருன்.

தர்மத்தின் நிழலிலே வாழும் அவனுக்குச் சங்கடம் வருகிறது; எந்த உருவத்தில் வருகிறது தெரியுமா?

அவன் அங்கங்கே கிடக்கும் சுள்ளிகளைப் பொறுக்கி: வந்து விறகாக உபயோகித்துக் கொள்கிறவன். ஒரு மாத காலமாக விடாமல் மழை பெய்வதால் அவனுக்கு விறகுப் பஞ்சம் வந்து விடுகிறது. அரிசியை யாசிக்க லாம்; பருப்பைப் பிச்சைவாங்கலாம். விறகை வாங்குவது வழக்கம் அல்லவே! அரிசியிருந்தும் பருப்பிருந்தும் அடுப் புக்கில்லாத சங்கடம் வந்து குறுக்கிடுகிறது; சோற்றுப் பிச்சைக்குப் புறப்பட்டு விடுகிருன். -