பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடிய உள்ளம் 14.1

இனிமையாக விழுகிறது. அவளை அழைக்கும் குறிப்பு ஒலி அது. இன்றும் காவல் அதிகமாக இருக்கிறது. அவள் உள்ளம் துடிக்கிறது; முகம் வாடுகிறது. உடம்பில் சோர்வு உண்டாகிறது. செய்கிற காரியத்திலே புத்தி போகவில்லை. *

இந்த நிலையில் இங்கும் ஒரு தோழி - காதலியின் சிநேகிதக்காரி - வருகிருள். காதலியின் தோற்றத்திலே புலப்பட்ட சோர்வு அவள் கண்ணே உறுத்துகிறது. ஏன் இப்படி இருக்கிருய்?’ என்று அந்தரங்கமாகக் கேட்கிருள்.

காதலி சொல்ல எண்ணுகிரு ஸ். வார்த்தை வர வில்லை; அவளுக்குத் துக்கம் பொங்குகின்றது. முதல் நாள் வாங்கி வைத்த வெற்றிலை இன்று வாடிப்போயிற்று; அரைத்து வைத்த சந்தனம் உலர்ந்துபோயிற்று; இறை வானத்திலே செருகிவைத்த பூ, குருவி கொத்தியதால் அழகு குலேந்துவிட்டது. இந்தக் குறைகளைத்தான் வெளிப்படையாகச் சொல்லலாம் என்று நினைக் கிருள். ஆனல் எல்லாவற்றிற்கும் சிகரமான குறையை அவள் தன்னை அறியாமலே கடைசியில் சேர்த்துச் சொல்லி விடுகிருள்: - o

வாட வெத்தலை வதங்க வெத்தலை

வாய்க்கு கல்லால்லே கேத்து வச்ச சந்தனப் பொட்டு

நெத்திக்கு நல்லால்லே குருவி கொத்தின அரளிப் பூவு

கொண்டைக்கு கல்லால்லே மாமன் வந்து தோப்பிலே கிக்குது மனசுக்கு நல்லால்லே!