பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 கோமாளிப் பாட்டு

தமிழ் நாட்டு விதூஷகனுக்குக் கோமாளி என்று பெயர். மற்றவர்களுக்குச் சிரிப்பு உண்டாக்கும் வேஷம், ஆட்டம், பாட்டு, பேச்சு எல்லாம் அவனிடத்தில் குடி கொண்டிருக்கும். .ெ வ று ம் விநோதத்துக்காகவே கோமாளி வேஷம் போட்டுக்கொண்டு ஆடுவது இந்த நாட்டு வழக்கம். 'என்னடா கோமாளிக் கூத்தாக இருக்கிறதே!' என்று தமிழ்நாட்டு மக்கள் சொல்வது உண்டு; விசேஷப் பயன் இல்லாமல் விநோதம் உண்டாக்குவதையே முக்கிய நோக்கமாகக் கொண்ட காரியங்களை அப்படிச் சொல்வார்கள்.

கிராமங்களில் "ராதா கல்யாண உற்சவம், பஜனை மடங்களில் நடத்துவார்கள். அதில் கடைசி நாள் ஆஞ்ச நேயர் வேஷம், கோமாளி வேஷம் எல்லாம் போட்டுக் கொள்வார்கள். மாரியம்மன் உற்சவம் முதலிய திரு. விழாக்களில் பலவகையான வேஷங்களை போட்டுக் கொண்டு தொழிலாளிகளும் வேலைக்காரர்களும் செல் வர்களிடம் பணம் வாங்குவார்கள். அந்த வேஷங்களுள் கோமாளி வேஷமும் ஒன்று. - - .*

கோமாளியின் திருவுருவம் எப்படி இருக்கும் தெரியுமா? தலையிலே ஒரு கோணற் குல்லாய் கும்மாச்சி யாக உயர்ந்து நுனியிலே வளைந்திருக்கும். பழுக்காக் காகிதத்தினல் அலங்காரம் செய்யப்பட்ட அந்தக் கிரீடத்தைப் புனைந்து கோமாளி வருவான். நெற்றியிலே திருநாமம், மீசை, தாடி நிரம்ப இருக்கும். நரைத்துப் போன தாடியும் மீசையும் உடையவளுகக் கோமாளிக்கு உருவம் கற்பித்திருக்கிருர்கள். அதனல், புளிச்சை,