பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோமாளிப் பாட்டு ;45

அவன் பாடும் பாடல்களாக அங்கங்கே வழங்குவன பல உண்டு. அந்தப் பாட்டின் வார்த்தைகளிலும், அர்த்தத்திலும் நகைச்சுவை இருக்கும். குழந்தைகள் அந்தப் பாடல்களைப் பாடிக்கொண்டு குதுரகலத்தோடு கூத்தாடுவார்கள்.

ஒரு கோமாளிப் பாடலைக் கவனிப்போம்: திருப்பதிக்குப் போயி வந்தேன் நாராயுணு - கான் திருமொட்டை அடித்து வந்தேன் நாராயுளு அங்கே ஒரு சோளக் கொல்லை நாராயுணு - கான் அதிலே ஒரு கதிர் ஒடிச்சேன் நாராயுணு கொல்லைக்காரன் கண்டுக்கிட்டான் நாராயுணு - என்னைக் கோலைக்கொண்டு அடிச்சுப்போட்டான் நாராயுணு.

திருப்பதிக்கு போனளும் திரு மொட்டை அடித்துக் கொண்டானம்! திருட்டு வேலை செய்து அடி பட்டானும்! 'திருமொட்டை" என்றும் 'நாராயுணு என்றும் அவன் சொல்வதிலே கூட வேடிக்கை இருக்கிறது.

காலையிலே எழுந்திருந்து நாராயுணு - நான் காலு கையைக் கழுவிக்கிட்டு நாராயுணு பட்டை நாமம் இட்டுக்கிட்டு நாராயுணு - நான் பழைய சோத்தைத் தின்னுப்புட்டு நாராயுணு பூக்குடலே எடுத்துக்கிட்டு நாராயுணு - நான் பூப்பறிக்கப் போகையிலே நாராயுணு தோட்டக்காரன் கண்டுக்கிட்டு நாராயுளு - என்னைத் தொப்புத் தொப்புனு போட்டடிச்சான் நாராயுளு வாழ்க்கையில் இத்தகைய கோமாளிகளும் இவர் களால் உண்டாகும் வேடிக்கை விநோதமும் இல்லா விட்டால் மனிதனுக்கு மகிழ்ச்சி எவ்வளவோ பங்கு குறைந்து போகும். - . . . . : ; ; ;

- இக் கட்டுரையில் வரும் இரண்டு பாடல்களையும் - உதவியவர் -

வித்துவான் பூரீ கே. வீாாாகவன் அவர்கள். -

- நா. 10 - - - ->