பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிபட்ட நாய் 153>

நாடோடிப் பாளல்னும் உணர்ந்திருக்கிருன். தான்பட்ட அவமானத்தைப் பிறர் காணக்கூடாது என்று எண்ணும். மனித சாதியின் எண்ணத்தை ஒரு நாயின் மேல் வைத்து. அவன் பாடுகிருன்.

来源 率 来, *

ஆண் நாய் ஒன்று மிகவும் சாமர்த்தியமாகத். திறந்து கிடக்கும் வீடுகளில் துழைந்து ஆட்களின் கண்ணில் படாமல் அங்குள்ள உணவு வகைகளைப் பாத்திரத்தோடு தூக்கிக்கொண்டு வந்துவிடும். அத னுடைய மனைவியாகிய பெண்நாய் அந்த உணவை: ஆசையோடு வாங்கித் தன் கணவனைப் பாராட்டும். இரண்டும் சேர்ந்து உண்டு இன்புறும்.

கூழ் சமைத்த பானையானலும் சரி, சோறு சமைத்த பெரிய பானையானலும் சரி, ஜாக்கிரதையாகக் கெளவிக்கொண்டுவரும் அந்த நாயரசு, ஒரு நாள் முகத்திலும் கன்னத்திலும் அடிபட்டு இரத்தம் ஒழுக: ஒடிவந்தது. அந்தக் காட்சியைக் கண்டு பெண் நாய்' உட்ல் நடுங்கி உள்ளம் வெதும்பியது. இவ்வளவு: நாளும் மிகவும் தந்திரமாகப் பானைகளைக் கெளவி வரும்: - இவரை யார் அடித்திருப்பார்கள்? இவரை அடிக்கும் திறனுடையவரும் இருக்கிருரா?' என்று நினைத்தது பெண் நாய். தன் கணவன், செளரியத்துக்குத் தலை: வரம்பு என்பது அதன் நினைவு. ஆகையால் அதன் முகத்தில் உள்ள காயங்களேக் காணும்போது, அந்த அக்கிரமச் செயலைச் செய்தவர் யாரென்று தெரிந்து, கொள்ளத் துடிக்கும் உள்ளத்தோடு பெண் நாய் கேட்கிறது. --

கூழ்ப்பானை திருடிவரும் -

கொற்றவரே, உம்மை யார் அடிச்சார்: மாப்பான திருடிவரும்.

மன்னவரே, உம்மை யார் அடிச்சார்?"