பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

空 பாட்டி கதையும் பாட்டும்

ஒரு மடமங்கை, எல்லா நலமும் வளமும் நிரம்பியவள், ஓர் அழகிய மஞ்சத்தில் படுத்துக் கிடக் கிருள். அடிக்கடி பெருமூச்சு விட்டுக்கொண் டிருக் கிருள். அவளுக்கு நோய் ஒன்றும் இல்லை. ஆயினும் அவ்வாறு சோர்ந்து கிடப்பதற்குக் காரணம் என்ன? அருகே, ஒரு தோழி சைத் தியோபசாரம் செய்து கொண்டு நிற்கிருள். அவளருகில் ஒரு கிழவி அமர்ந்து கொண்டிருக்கிருள். நங்கையின் எழில் ததும்பும் மேனியிலே வாட்டமும், ஒளி துளும்பும் முகத்திலே கவலைக் குறியும் குயிலினிமை கொண்ட குரலிலே துயர்த் தொனியும் மேலோங்கி நிற்கின்றன.

வந்துவிடுவார்: கவலைப்படாதே" என்று அந்தக் கிழவி ஆதுதல் சொல்கிருள்.

வந்து விடுவாரா? . . எங்கே, இன்னும் வரக் காணேனே ! . . சிறிது போசாமல் இருங்கள். . அது என்ன சத்தம்?. தோழி, ஒடிப்போய்ப் பார்: அவர் தேர் வருகிறதா என்று பார்த்துவா' என்று அடிக்கடி நங்கை சொல்லுகிருள். தோழியும் அவளைத் திருப்தி செய்வதற்காகப் போய்ப் பார்த்து விட்டு வருகிருள். 'அவர் தேர் வரவில்லை என்பதைத்தான் திருப்பித் திருப்பிச் சொல்லும் நிலையில் இருக்கிருள் தோழி. பாவம்! ஆவலோடு எதிர்பார்க்கும் நாயகிக்கு ஏமாற்றம் உண்டாகிறது. . . . . . . ". . . . .

அந்த நாயகியின் நாயகன் வெளி நாட்டுக்குப் போயிருக்கிருன் தன்னுடைய அரசன் செய்யும் போருக்குத் துணையாகவோ, தானே ஒரு படைக்குத்