பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2S)

மாரியம்மன் பாட்டு

தமிழ் நாட்டிலேதான் திருக்கோயில்கள் அதிகம். சிவால்யங்களும் விஷ்ணுவாலயங்களும் கிராமங்கள் தோறும் இருக்கின்றன. கோயில் இல்லா ஊரில் குடி யிருக்க வேண்டாம் என்று ஒளவைப் பாட்டி பாடு கிருள். திருக்கோயில் இல்லாத திருவில் ஊர் அடவி காடு. . “ என்று திருநாவுக்கரசர் சொல்கிருர். தமிழர் தம்முடைய கலைச் செல்வங்களுக்கு உறைவிடமாகக் கோயில்களை வைத்துப் பாதுகாத்தார்கள். சில கோயில் களில் செல்வத்தைச் சேமித்த நிதியும் இருந்தன: அதற்குக் கோயிற் பண்டாரம் என்று பெயர்.

சிவ விஷ்ணு ஆலயங்களின் வழிபாட்டு முறை முதலியன, தூய்மை, ஒழுக்கம், அறிவு எல்லாம் உடைய வர்களால் நடத்தப்பெறும். குடி மக்களில் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களின் வழிபாட்டுக்கும் தனித்தனியே கோயில்கள் உண்டு. பிடாரிகோயில், காளி கோயில், ஐயனர் கோயில், பகவதியம்மன் கோயில், மாரியம்மன் கோயில் முதலிய கோயில்கள் கிராமதேவதை கோயில் கள் என்று வழங்கப்படும். இந்தக் கோயில் விழாக்களில் ஊரில் உள்ள குடிமக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஊக்கத்தோடு வழிபடுவார்கள்.

மாரியம்மன் வழிபாடு தமிழ் நாட்டில் மிகவும் சிறப்பாக நடந்துவருகிறது. எல்லாச் சாதியினரும்: மாரியம்மனை வழிபடுகின்றனர். அம்மை நோய்க்கு மூலகாரணம் மாரியம்மன் என்ற கொள்கையில்ை அத் தெய்வத்துக்கு மிக்க சிறப்பு ஏற்பட்டிருக்கிறது. - - -