பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

G

கதம்பம்

ஏற்றப் பாட்டு, பிள்ளையார் முதலியவர் தோத் திரங்களோடு ஆரம்பமாகும். சில பாடல்கள் வேறு ஆரம்பம் உடையதாகவும் இருக்கும். சிறு சிறு பாடல் களாக இருப்பது சிறு பான்மையே. பெரும்பாலும் நீண்ட பாடல்களாகவே இருக்கும். சேர்ந்தாற்போல் பல மணி நேரம் இறைக்கும் தொழில் உடையவர்கள் பெரிய பாடல்களைப் பாடுவார்கள். பெரிய பாடல் என்றல் முதலிலிருந்து கடைசி வரையில் உள்ள அடிகள் நூற்றுக் கணக்கில் இருக்கும். ஆனல் அவை ஒரே விஷயத்தை முறையாகவும் தொடர்ச்சியாகவும் .ெ சா ல் லு ம் ப டி அமைந்திருப்பதில்லை. மனம் போன போக்கில் புராணக் கதைகளையும் தெய்வப் பிரபாவத்தையும் வழிபாட்டு முறையையும் கோத்து அமைத்தனவாக இருக்கும்.

ஒவ்வொரு தடவையும் சாலைக் கவிழ்க்கும்போது ஏதாவது ஒரு வாய்பாட்டைச் சொல்லிச் சாலின் எண்ணிக்கையையும் கூடச் சொல்வான் ஏற்றக்காரன்: மயிலேறியான் ஒண்ணு, மயிலேறியான் ரெண்டு’ என்பது போலச் சொல்வான். இந்த வாய்பாடு முருகக் கடவுளுக்கு உரிய முக்கிய ஸ்தல் த்தைச் சார்ந்த இடங் களில் வழங்கும். வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமாக வழங்குவதும் உண்டு. சம்பாஷணை உருவத்தில் அமைந்த ஒரு பாட்டில் வேலையா, சுப்பையா என்ற பெயர்கள் வருவதை முன்பு கண்டோம். அந்த இரண்டும். முருகக் கடவுளின் திருநாமங்கள். ஆகையால் அந்தப் பாட்டும் முருகனை வழிபடுவோர் மிகுதியாக உள்ள இடத்தில் முதலில் உண்டாகிப் பரவியிருக்க வேண்டும்,