பக்கம்:நாடோடி இலக்கியம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ž "எப்போ மழை பெய்யும்:

மழை இல்லாவிட்டால் உலகத்தில் என்ன இருக் கிறது? நீதி நெறி, பூஜை புரஸ்காரம், பக்திவிசுவாசம், ஆபரணம் - எல்லாம் மழை பெய்து பயிர் ساسا (58 يولييه விளைந்து வயிறு நிரம்பின பிறகு மனித ஜாதியின் உள்ளத்தையும் உடலையும் அழகுபடுத்துவதற்கு வரும். பசியாற உணவு கிடைக்கும்போதுதான் மானம், குலம், கல்வி முதலிய பெருமைகளை மனிதன் கவனிக்கிருன். பசி வந்தாலோ எல்லாம் பற்ந்துபோகின்றன. பசியில் லாத நாடுதான் சொர்க்கலோகம்.

. பசி தீர உணவு வேண்டும்; அந்த உணவு விளைய மழை வேண்டும். மழை இன்றி மாநிலத்தார்க்கு இல்லை என்று ஒரேயடியாகச் சப்புக் கொட்டுகிருர் ஒரு புலவர் திருவள்ளுவர் என்னும் தெய்வப்புலவர் இருக்கிருரே, அவர் மழையைப் பற்றி ஒர் அத்தியாயமே பாடியிருக்கிறர். - - மழை இல்லாவிட்டால் உலகமே பஞ்சத்தில் அடி பட்டு வற்றலாகிவிடும். கடைகளிலே காசு கொடுத்துப் பண்டம் வாங்கும் உத்தியோகஸ்தர்களுக்கும் ஏழடுக்கு மாளிகையில் உறங்குகின்ற செல்வர்களுக்கும் பட்டனத் தொழிற் சாலைகளிலே புழுங்கிச் சாகும் தொழிலாளி களுக்கும் மழையில்லையென்று சொன்னல் அந்தத் துன்பம் ந்ேரே உறைக்காது. உத்தியோகஸ்தர்களுக்குச் சாமான்கள் கிராக்கி யாகிவிட்டால்தான் பஞ்சம் தெரியும், பணக்காரர்களுக்கு லாபம் குறைந்தால் தெரியும். பஞ்சம் அதிகமாக ஆக எல்லாவற்றுக்கும் மூலகாாணம் மழையில்லாமை என்பது எல்லோருக்கும் தெரியவரும். இந்தப் பஞ்சத்தை முதலில் உணர்ந்து