பக்கம்:நாட்டியக்காரி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தினசரிப் பிழைப்பு 'ஜல்.ஜல்.ஜலஜல.ஜல்.’ இந்த ஒலியுடன் 'கடகட என்ற சக்கர ஓசையும் கலந்தது. குதிரை தலையை ஆட்டிய வண்ணம் ஜல ஜல் கீதம் பாடிக்கொண்டு அடிமேல் அடி எடுத்து வைத்தது. அதன் கானத்திற்குப் பின்னணிபோல் இருந்தது வண்டி உருளும்பொழுது எழும் ஒசை. தீனியே கண்டறியாத தெனலிராமன் குதிரை யைப்போல் விளங்கிய அந்த ஐந்துவின் உடலிலே அந்த வண்டியை இழுப்பதற்கும் சக்தி இருக்கிறதா என்று எண்ணத்துண்டியது அதன் தோற்றம், அதைக் கவனியாமலே ஹைஹேய்' எனச் சவுக் கைச்சுண்டி களிர் எனும் ஒலியை எங்கும் பரப்பி ன்ை வண்டிக்காரன். இன்னும் ஒரு ஆள்....ஒர்ாள்... டவுனுக்கு வரீங்களா ஐயா என அவன் வாய் பல் லவி பாடிக்கொண்டிருந்தது. வண்டிக்குள் மூன்றுபேர் இருந்தனர். அவர்கள் மூவரும் சற்று படுத்து வண்டி முழுவதையும் அடைத் துக்கொண்டு இடமின்றித் திண்டாடினர்கள். அவர் களில் ஒருவர் முணுமுணுத்தார். இன்னும் ஒரு ஆளா! l 必 அட ஆண்டவனே! 'அவனுக்கு ஆசைதான், ஆனால் அவன் குதிரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டியக்காரி.pdf/40&oldid=782762" இலிருந்து மீள்விக்கப்பட்டது