பக்கம்:நாட்டிய ராணி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3


குட்டிகள் பால் குடிப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? அதைப் பார்ப்பதற்கே இன்பமாக இருக்கும்.

பட்டணங்களிலே இருப்பவர்களுக்கு அது பெரும்பாலும் தெரியாது. கிராமங்களிலே உள்ள பண்ணைகளில்தான் இந்தக் காட்சியைக் காணலாம். தாய் ஆடு மிகுந்த அன்போடு குட்டிக்குப் பால் கொடுக்கும். வயிறு நிறைந்தவுடன் குட்டிகள் இருட்டாகும் வரையில் துள்ளிக்குதித்து விளையாடும்.

ஒரு நாள் காலையில் ஆடுமாடுகள் வழக்கம் போலப் புல் மேய்வதற்குப் புறப்பட்டன. அன்றைக்கு நாட்டியராணி அறையில் அடை பட்டுக் கிடக்க விரும்பவில்லை. அதனுல் எங்கோ ஒளிந்துகொண்டது.

அதன் தாய் அதைத் தேடிக் கண்டுபிடித்து அறைக்குள்ளே போகும்படி சொல்லிற்று.

"போம்மா, நான் எத்தனை நேரம் இந்த அறைக்குள்ளே அடைபட்டுக்கிடப்பது ? நான் உள்ளே போகமாட்டேன்” என்று பிடிவாதம் செயதது நாட்டியராணி.

" கண்ணு, நீ இன்னும் நன்ருக வளர்ந்த பிறகு எங்களோடு வெளியிலே வரலாம். இப்பொழுது நீ தனியாக வெளியில் இருந்தால் ஏதாவது ஆபத்து வரும் ” என்று செல்லிற்று தாய்.

"எனக்கு ஒன்றும் ஆபத்து வராது. நான் அந்த அறைக்குள்ளே போகமாட்டேன் ” என்று சிணுங்கிக் கொண்டே நாட்டியராணி பதில் கூறிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாட்டிய_ராணி.pdf/8&oldid=1064601" இலிருந்து மீள்விக்கப்பட்டது