பக்கம்:நான்கு நண்பர்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 வேடன் மானைப் பார்த்தான். ‘அடே, இங்கே ஒரு மான் செத்துக் கிடக்கிறதே!’ என்று நினைத்தான். உடனே கையில் இருந்த ஆமையை ஏரிக்கரையில் வைத்துவிட்டு, மானை நோக்கிப் போனான். வேடன் நெருங்கி வருவதைக் காக்கை பார்த்தது. பார்த்ததும், ‘காகா, காகா’ என்று கத்திக்கொண்டே மேலே பறந்தது. உடனே, மான் சட்டென்று எழுந்தது; ஒரே ஒட்டமாக ஓடிவிட்டது.

இதற்குள் ஏரிக் கரையில் இருந்த ஆமையிடம் எலி ஓடிவந்தது. ஆமையைக் கட்டியிருந்த கயிற்றை அவசர அவசரமாகப் பல்லால் கடித்து, அறுத்தது.