பக்கம்:நான் இருவர்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை 1870-80க்கு இடைப்பட்ட பத்து வருட காலம் ஆங்கில நாவல் இலக்கியப் பாதையிலே ஒரு மைல்கல் என்று சொல்ல வேண்டும். இந்தக் காலத்தில் காவலுக்குரிய மதிப்பும் வாசகர் களின் தொகையும் உயர்ந்தன. பாகம் பாகமாக, பைண்டு' வால் யூம் நாவல்களை அடுக்கி வைத்துக் கொண்டு பாரதம் பண்ணிக் கொண்டிருந்த மக்களிடையே புது விழிப்பும், உணர்வும் ஏற்பட் டது. மக்கள் அந்தத் தலையணை நாவல்களைத் தள்ளினர்; அவை மவுசிழந்து தவித்தன. மேலும், மக்கள் பழைய பாதையை விட்டு விலகி, புதுப்புது பாணியிலும், முறைகளிலும் வெளிவரும் "காவல்களையே விரும்பினர். இந்த மாறுதலான மனோபாவத்தை, பதிப்பாளர்களும் உடனடியாக உணர்ந்து கொள்ள வில்லை. இந்தத் திசை மாற்றத்தை முதன் முதலாக உணர்ந்தவரும், ' உணர்த்தியவரும் தான் ராபர்ட் லூயி ஸ்டீவென்ஸன். ஸ்டீவென்ஸன் (1850-94 ) சிறந்த கலைஞர். அவருடைய, எழுத்துக்களிலெல்லாம் அதைத்தான் அவர் நிர்மாணம் செய்து வந்தார். அவர் எதை எழுதினாலும் சரி, அவருடைய வசனப் போக்கிலும், மெருகிலும் அவர் பிரக்ஞை தவறாமல் இருப்பார். - அதனால் தான் இதயத்திலிருந்து பூரண அழகையும் தமது வசனத்திலே அவரால் கொண்டுவர முடிந்தது. ஸ்டீவென் ஸன் தம் நவீனங்களைப் புதுப் பாதையில், 'கதை சொல்லும்' பாணியில் திருப்பினார். ஆனால், இந்தப் பாதையில் வண்டி லகு வில் குடை சாய்ந்துவிட நேரும்; அப்படி கே ரா!மல் அவரால் பார்த் துக் கொள்ள முடிந்தது. காரணம், கையைவிட்டு கழுவி விடாத: வசன நடையும், சமயறிந்து கதையை கடத்திச் செல்லும் கலை ஞான மும் தான். ஸ்டீவன்ஸனின் வசனம் வாசகனுக்குப் போதை தராது; எனினும் இனிமை தரும், சொற்களின் கனத்தையும், பொருளையும் உணர்ந்து, அவற்றைச் செட்டாக உபயோகித்து, அதிலே ஒரு எழிலை உண்டாக்குவதில் சித்தர், அவர், அநாவசிய மான வார்த்தைப் பிரயோகமோ, காசக்கதையை நடுவே நிறுத்தி வீட்டு, வம்பளக்கும் விவகாரமோ" அவரிடம் கிடையாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/5&oldid=1268727" இலிருந்து மீள்விக்கப்பட்டது