பக்கம்:நான் இருவர்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| நான் இருவர் உன் நகரத்து மோன அமைதியிலே ரீங்காரம் மட்டும் ஒலித்துக் கொண்டிருந்தது. அவர்கள் இருந்த இடத்தின் அமைதியை அது ஒன்றுதான் கலைத்தது-அத்த அறைக்குள்ளே நடக்கும் காலடி ஓசைதான் அது ! - " அது நாள் முழுவதும் நடந்து கொண்டிருக்கும் ” வரன் றன் 'பூல். " ராத்திரி முழுதும் கூடத்தான் நடக்கும். மருந்துக் கடை யிலிருந்து ஏதேனும் மாதிரிச் சரக்கு வந்தால் மட்டும், இது சிறிது நேரம் நிற்கும். அதனுடைய! குற்றமுள்ள நெஞ்சின் குறு குறுப்புத்தான் அதை இப்படி, அலைக்கழிக்கிறது. அதன் ஒவ்வொரு அடிச் சுவட்டிலும் மோசடியால் இந்திய ரத்தத்தான் பரவியிருக்கிறது. உஷ் ! கேளுங்கள் எலார்-இன்னும் கொஞ் சம் உற்றுக் கேளுங்கள், அட்டர்ஸன் ! இது டாக்டரையாவின் காலடி ஓசையா?" என்று முணு முணுத்தான் பூல். காலடியோசை மெதுவாய்த் தான் கேட்டது. எனினும் ஏதோ ஆட்டி ஆட்டி நடப்.தைப் போலவும், இருந்தது. ஏனெனில், காலடி ஓசை விட்டு வீட்டுத் தான் கேட்டது. பிடுக் காக நடந்து செல்லும் ஹென்றி ழெகிலின் கனத்த காலடி ஓசை மாதிரியே இல்லை. அட்டஸன் பெரு மூச் செறிந்தார். “ இதைத். தவிர வேறு ஏதேனும் உண்டா?" என்று கேட்டார். பூல் தலை 4.Gாட்டினான். " ஒரு தடவை அது அழுததைக் கூட நான் கேட்டேன்" என்றாள். “ அழுததா? எப்படி ?" என்று உடம்.பில் புல்லரிப்புக் குளிர்ந்தோடக் கேட்டார். " ஒரு பெண்ணைப் போலவோ, - ஒரு துராத்மாவைப் , போலவோ அழுத து, ஸார்! அதைக் கேட்ட எனக்கும் நெஞ்சில் 1.பாரமேறி, அழுகை வந்து விட்டது." பத்து நிமிஷமும் கழிந்தது. பூல் வைக்கோலுக் கடியில் புதைத்து வைத்திருந்த கோடரியை எடுத்தான். வெளிச்சம் தெரியும் படியாக, மெழுகு வத்தியை ஒரு மேஜை மீது வைத் தான். அந்த நள்ளிரவின் அமைதியிலே மேலும் கீழும் செல்லும் அந்தக் காலடி ஓசை கேட்கின்ற பக்கமாய் இருவரும் மூச்சை அடக்கிக் கொண்டு நெருங்கினர். :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நான்_இருவர்.pdf/61&oldid=1268785" இலிருந்து மீள்விக்கப்பட்டது