பக்கம்:நான் கண்ட சோவியத் ஒன்றியம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

அதை ஏற்றுக்கொண்டது. பஞ்சாப் மாநிலக் கல்வி நெறியாளர் குமாரி சரளாகன்னா மற்றொரு உறுப்பினர். மூன்ரும் நபர், திரு. இராசராய் சிங். இவர் இந்திய அரசின் இணைக் கல்வி ஆலோ சகர். எங்கள் குழுத் தலைவர்.

நாங்கள் மூவரும் 1961ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் 15ஆம் நாள் புது தில்லியிலிருந்து புறப்பட்டோம். அன்று பகல் பதினோரு மணிக்கு தில்லி பாலம் விமான நிலையத்திலிருந்து ஏர்இந்தியா இன்டர்நேஷனல் விமானம் மூலம் புறப்பட ஏற்பாடு. ஆனால், பன்னிரண்டு மணி பத்து நிமிடத்திற்கே விமானம் புறப்பட்டது. விமானத் திற்குச் செல்லுமுன், சுங்கச் சோதனை நடந்தது. செல்கைச் சீட்டுச் சரியாக இருக்கிறதா என்று தணிக்கை செய்யப்பட்டது. இச்சோதனைக் கூடங்களைக் கடந்தபின் பயணிகள் தங்குமிடத்தில் காத்திருந்தோம். மாஸ்கோ செல்லுவோர் விமானத்தில் ஏறிக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு ஒலிபெருக்கி மூலம் கேட்டது.

கைப்பையை ஒரு தோளில் மாட்டிக்கொண்டேன். ஒவர் கோட்டை மடித்து மற்றொரு தோளில் போட்டுக்கொண்டேன். விறுவிறு வென்று சென்றேன். விமானத்தில் ஏறுவதற்குப் படி வைத்திருந்தார்கள். அதனடியில் விமானக் கம்பெனியைச் சேர்ந்த ஒருவர் நின்றுகொண்டிருந்தார். ஒவ்வொருவருடைய பயணச் சீட்டையும் பார்த்து மேலே அனுப்பினர். விமானத்திற்குள் நுழைந்ததும் விமானப் பணிப்பெண் ஒவ்வொருவ ருக்கும் குறித்துள்ள இடத்தைச் சுட்டிக் காட்டினார்.