பக்கம்:நான் கண்ட சோவியத் ஒன்றியம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

அது நடந்தது. பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்களும, ஆசிரியைகளும், மாணவ மாணவிகளும் அதில் கலந்து கொண்டார்கள். ஒரு மாணவி எங்களை வரவேற்றார். ஆங்கிலத்தில் வரவேற்றார். தன் தாய்மொழியில் அன்று. வரவேற்பு வந்தவர்களுக்குப் புரியவே! தன் தாய்மொழிப் பற்றைக் காட்ட அன்று என்று நினைத்தார்கள்போலும்.
தனி இசை, குழு இசை, தனி நடனம், குழு நடனம் ஆகிய கதம்ப நிகழ்ச்சிகள் வரவேற்பின் ஒரு பகுதி. அத்தனையும் பாராட்டக்கூடிய வகையில் இருந்தன. அக் கதம்ப நிகழ்ச்சிகளுள் ஒன்று இந்திய நடனம். அதை அறிவித்ததும் என்ன வருமோவென்று ஆவலோடு எதிர்பார்த்திருந்தோம். வந்தது இந்திய நடனம்! என்ன நடனம்? குறத்தி நடனம். நன்றாக இருந்தது அது. நம் நடனம் ஒன்றைக் குழந்தைகள் கற்று வைத்திருப்பதைக் கண்டு பூரித்தோம். பிறர் கலையைக் கற்பது இழுக்கு என்ற கற்காலக் கொள்கை ஏனைஅவர்களை அண்டவில்லை.
இனியது இசை. ஆயினும் அதிலேயே மூழ்கி விடலாமா? மற்றதையும் கவனிப்போம்.
டாஸ்கண்ட் நகரில் ஒரு செயற்கை ஏரி உண்டு. அது ஒரு பெரிய பூங்காவில் அமைந்துள்ளது. அதை அமைத்தவர்கள், "இளங் கம்யூனிஸ்ட்டுகள். ஆகவே அதற்கு 'இளங் கம்யூனிஸ்ட் ஏரி என்று பெயர். பல ஆண்டுகளுக்குமுன், டாஸ்கண்ட் இளைஞர்கள் கூடி இப் பொதுப் பணியைச் செய்து முடித்தார்கள். ஏரியோ அகன்றதாய் இருக்கிறது.