பக்கம்:நான் கண்ட பெரியவர்கள்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நான் காணும் இளையர் ♦ 227


சிறந்த முறையில் எடுத்துப் பேசும் ஆற்றலுடையவர் முனைவர் அ. பாலறாவாயன் அவர்கள்.

பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக இருந்துகொண்டே தமிழ், சைவம் என்ற இரண்டுபற்றியும் மிகச் சீரிய முறையில் சொற்பொழிவாற்றிக் கேட்டாரைத் தம் வசம் இழுக்கும் நாவீறு படைத்தவர் முனைவர் அரங்க. இராமலிங்கம் அவர்கள்.

தமிழ்த் துறையில் தலைமை வகித்து கல்லூரிப் பேராசிரியராய் பணிபுரிந்தும், உருது மொழியைத் தாய் மொழியாகக் கொண்டும் உள்ள இவர் சிறந்த பேச்சாளர், சிறந்த எழுத்தாளருமாவார். மரபுக் கவிதையில் ஊறிய இவர் புதுக்கவிதையில் இணையில்லாத பல நூல்களை யாத்துள்ளார். அவர்தான் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள்.

மதுரைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்து பல நூல்களை வெளியிட்டு ஒப்பாய்வு இலக்கியத்தில் சிறந்த கவனம் செலுத்தி நூல்கள் எழுதியுள்ளவர் இவர். இப்பொழுது தஞ்சைப் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராக இருந்து கொண்டு, தொய்ந்து கிடந்த அப்பல்கலைக்கழகத்தைத் துக்கி நிறுத்த அரும்பாடுபடுபவர் முனைவர் கதிர் மகாதேவன் அவர்கள்.

மொழியியல் தமிழ் இலக்கியம் என்பவற்றில் மூழ்கித் திளைத்து, பல நூல்கள் எழுதியும் வெளிபடுமாறும் இன்றும் பணிபுரிபவர் இவர் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தராக இருந்து ஈடுஇணையற்ற முறையில் அது விளங்குமாறு ஓய்வின்றி உழைத்து அதற்கு வடிவுகொடுத்தவர் முதுமுனைவர் வி. ஐ. சுப்ரமணியம் அவர்கள்.