நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள் எண்ணிவிடுதல் எளிது. எவரும் ஒரு மேடையை மட் டும் அமைத்துக்கொண்டு, அதன்மீது ஏறிநின்று தம் கொள்கையைத் தடையின்றி எடுத்துரைக்க லாம். அரசியல்கூட்டங்கள், தொழிலாளர்கிளர்ச்சி, மதப் பிரசாரம் எல்லாவற்றுக்கும் ஹைட்பார்க் ஒரு பொது இடமாகும். இங்கே பேசுபவர்கள் மன்னர் தவிர யாரையும் பழிப்பர்.கடவுளும் இவர்களின் சொல்லம்புகளினின்றும் தப்புவது இயலாது! தக்க வர்கள் இந்த அரங்கத்தில் பேசுவதில்லை. 'ஹைட் பார்க் பிரசங்கி' என்பது ஓர் இழிவான பெயராகும். ஹைட்பார்க் பெரிய சாலைகட்கு நடுவே, நல்ல சுற் றுப்புறங்களுக்குள் அமைந்துள்ளது. இப்பூங்கா வுக்குள்ளேயே படகோட்டவும், பிற வழிகளிற் பொழுதுபோக்கவும் வசதிகள் உள்ளன. இப்பூங்கர வின் பசும்புல்லின்மேல், பல நூறுபேர் படுத்துப் புரளுவர். நாட்டின் பெருமை . ஒரு நாடானது தான் செய்யும் பொருள்களா லாவது, இயற்கை அழகாலாவது, அதன் தலைவர் களாலாவது, தன் மக்களின் குணங்களாலாவது புகழ் பெறலாம். பிரிட்டனின் புகழுக்குக் காரண மானவர் பிரிட்டிஷ் மக்களேயாவர். பொதுவாகப் பெரிய நகரத்து மக்கள் நாட்டு மக்களின் சரியான பிரதிநிதிகளாக இருப்பதில்லை. பம்பாய் அல்லது டில்லியில் வாழ்பவரை வைத்து, இந்தியரைப்பற்றி முடிவுகூறுவது பொருந்தாது, நியூயார்க்கில் வாழ்பவருக்கும், அமெரிக்காவின் பகு திகளிலுள்ளவர்கட்கும் ஒற்றுமையே இல்லையெனத்
பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/10
Appearance