உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள் பொதுவாக எல்லா மக்களும் கலையில் விருப்ப முடையவர்கள். அண்மையில் மற்றத் துறைகளில் முன்னேறியுள்ள அமெரிக்காவிலும் ஆஸ்திரேலி யாவிலும் கலையுணர்ச்சி மிக விரைவாக உருவாகிக் கொண்டு வருகிறது. நாணய வழக்கு நாணயங்களுக்குப் பெயரிடுவதில் நம்மைப் போன்ற வழக்கம் பிறநாட்டவரிடமும் உண்டு. இரண்டணா நாணயத்தைத் தமிழ்நாட்டின் சில பகு திகளில் பணம் என்கிறோம். 100 ரூபாய் நோட் டைப் பச்சை நோட்டு என்கிறோம். இதேபோல் ஆஸ்திரேலியர் 3 பென்சை த்ரம் என்றும், 5 பவுன் நோட்டை பைவர் என்றும், 100 பவுன் நோட்டை செஞ்சரி என்றும் கூறுவர். அமெரிக்கர், 5 சதத்தை நிக்கல் என்றும், 10 சதத்தை டைம் என்றும் சொல் லுகிறார்கள். நாணயமே இல்லாத 4 பைசாவை நாம் துட்டு என்பது போல், நாணயமே இல்லாத 21 சில்லிங்கை ஆங்கிலேயர் கினி என்பர். உல்லாசப் பிரயாணம்

மேலைநாடுகளிலுள்ள, மற்றொரு பழக்கம் ஆண்டுக்கு ஒருமுறையாவது அதற்கு மேற்பட்டா வது, தத்தம் நிலைக்கு ஏற்றவாறு ஒவ்வொருவரும் சிலநாட்கள் ஓய்வு எடுத்துக்கொண்டு உல்லாச மாய்ப் பிரயாணம் செய்வதாகும். பல வாரங்கட்கு முன்பே இப்பிரயாணத்தைத் திட்டமிட்டு, அதன் செலவுக்காகச் சிறிது சிறிதாகப் பொருள் சேர்த்து அதைத் தனியே வைத்திருப்பதும் வழக்கம். மிகுதியானவர்களை ஒரு மலைக்காவது தீவுக