உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லண்டன் தச் செய்யும் ஆற்றல் இவர்கட்கு உண்டு. ஒருநீதிபதி நியாயமாகத் தீர்ப்புக் கூறினால் மட்டும் போதியதா காது; அவர் நியாயமாகவே தீர்ப்புக் கூறியிருப்பு தாகக் குற்றவாளியும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று காலஞ்சென்ற எஸ். சத்தியமூர்த்தி அவர்கள் அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறேன். இதைப் பிரிட்டிஷார் தம் வாழ்க்கையில் நாள்தோறும் பின் பற்றுவதைக் கண்டேன். மேலும், "குற்றஞ் செய்தவன் தண்டனையடையாமல் தப்பினாலும் தப்ப லாம். குற்றமற்றவன் எக்காலத்தும் தண்டனைக்கு உள்ளாகி விடக்கூடாது, என்ற கொள்கையில் அவர்கள் உறுதியுடையவர்கள். 1. 37 < ஏதாவதொரு உதவிக்கு நாம் பிரிட்டிஷாரிடம் சென்றால், அதைச்செய்ய இயலவில்லை யென்பதை அவர்கள் பொறுமையாகவும் இனிமையாகவுங் கூறுவர். இறுதியில் நாம் நம் காரியம் கைகூட வில்லை என்பதையும் மறந்து, 'பாவம், நமக்கு உதவி செய்யத் தயாராயிருக்கிறார். அதற்குத் தக்க சூழ்நிலை இல்லையே!' என்று அந்தப் பிரிட்டிஷார் மீதே நாம் இரக்கங் காட்டுவோம். இந்தத் தந்திர மான பேச்சால்தான் தங்க வைரச் சுரங்கங்கள் தென்னாப்பிரிக்காவிலும், அவற்றை வாங்குவோர் அமெரிக்காவிலும், வைரத்தை அறுத்து மெருகு கொடுப்போர் பெல்ஜியத்திலும் இருந்தும், தங்கத் தின் விலையும் வைரத்தின் விலையும் இன்னும் லண்டனிலேயே முடிவு செய்யப்படுகின்றன. பெட்ரோல் மத்திய கிழக்கு நாடுகளிலும் பர்மா விலும் இருக்கலாம்; அதன் தலைவிதி லண்டனில் தான் தீர்மானிக்கப்படுகிறது. தேயிலை இந்தியாவிலும் இலங்கையிலும் உற்பத்தியாகிறது;