லண்டன் பிறர் பேசத்தாம் கேட்டுக்கொண்டிருத்தல் என்ப னவாம். பிரிட்டனில் இல்லாதவை நாட்டைக் காட்டிக் கொடுக்கும் ஒற்றர்கள், ரயிலில் இரண்டாம் வகுப்பு,* அரசியற்புரட்சி, தோல்வி மனப்பான்மை,தங்கம், நகைச்சுவை என்பவைகளாம். பிரிட்டிஷாரின் மிக்க வலிய ஆயுதம்--வாக்குரிமை. பிரிட்டிஷாரின் இணையற்ற செல்வம் - ஷேக்ஸ்பியரின் நாடகங்கள். பாதாள ரயில்வே உலகின் பெரு நகரங்களில், பூமிக்குக்கீழ் ரயில் ஓடுகிறது. இவற்றுள் சிறந்தது, வண்டன் நகரத்து 'ட்யூப்' (Tube) ரயில் நிலையங்களை இணைக்கும் இந்த ரயில்வேயின் படம் விலையின்றி யாவருக்கும் கொடுக் கப்படுகிறது. இயந்திர உதவி கொண்டே இங்கே பிரயாணச் சீட்டுக்களை விற்கின்றனர். நாம் ஏறிய ரயில் நாம் செல்ல வேண்டிய இடத்துக்கு நேராகச் செல்லாவிட்டால், எந்த இடத்தில் நாம் வண்டி மாறவேண்டு மென்பது பிரயாணச்சீட்டி லேயே அச்சிடப்பட்டிருக்கும். பிரயாணச்
- சீட்டு வாங்குமிடத்திலிருந்து பாதாளத்துக்குச்
செல்லவும், பாதாளத்திலிருந்து சாலைக்
- பிரிட்டிஷ் ரயில்களில், நம் நாட்டைப்போல முதல் இரண்
டாம் மூன்றாம் வகுப்புகள் இருந்தன. இரண்டாம் வகுப்பை மட்டும் எடுத்து விட்டனர். எனினும், முதல் மூன்றாம் வகுப்புக் களின் பெயர்களைமட்டும் மாற்றவில்லை.