உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லண்டன் 11 திறந்துகொள்ளும்; வண்டி புறப்படுமுன் தாமே மூடிக்கொள்ளும். இந்த ரயில்களில் ஒரே வகுப்புத் தான் உண்டு. ஒவ்வொரு வண்டியிலும் பல இடங் களில், எந்த வரிசையில் எந்த நிலயம் இருக்கிறது என்பது படங்கள் மூலம் உள்ளங்கை நெல்லிக்கனி போல் காட்டப்பட்டிருக்கிறது, வண்டிகளும் நிலயங் களும் மிகத் தூய்மையாக உள்ளன. மிகத் தூய்மை யாகவுள்ள 'ட்யூப்' நிலயத்து ஊழியர்கட்கு லண் டன் போக்கு வரவு இயக்கத்தார் ஆண்டுதோறும் பரிசுகள் வழங்குகின்றனராம். போலீஸ் 5 , . லண்டன் போலீசாரை வாயார வாழ்த்தாதார் இல்லை. யாவரும் கேளிர் எனக்கருதி, இவர்கள் பிற ருக்குத் தொண்டாற்றுகின்றனர். அரசியல் விடு தலை அடைந்த இந்தியாவில், போலீசாருடன் ஒத் துழைக்க வேண்டிய நாம்,லண்டன் போலீசாரைப் பற்றி நன்கு தெரிந்து கொள்வது இன்றியமை யாதது. லண்டன் போலீசில் வேலை கிடைக்க அடி 10 அங்குலம் உயரமும், 36 அங்குலம் மார்பு அகலமும், மெட்ரிகுலேஷன் படிப்பும், ஆங்கிலம் தவிர ஒரு வேற்று மொழியறிவும் வேண்டும். வேலை கிடைத்தவுடன் போலீஸ் கல்லூரியில் போலீஸ் சட்டங்கள், கார் ஓட்டுதல், மோட்டார் சைக்கிள் ஓட்டுதல், நீந்துதல், குதிரைமீது சவாரி செய்தல், துப்பாக்கியால் சுடுதல், டைப் அடித்தல், சுருக்கெழுத்து எழுதுதல், குமஸ்தா வேலை, தந்தி அடித்தல், டெலிபோன் கருவியை இயக்குதல், முதற் சிகிச்சை செய்தல், விரல் ரேகையைத் தெளிவாக எடுக்கும் முறை 83-2 . கை