2. நடுவழி நாடு ஐரோப்பாக் கண்டத்திலுள்ள பல சிறு நாடு களில், பொருளாதாரத் துறையில் பெருவளர்ச்சி யடைந்துள்ளது சுவிடன் நாடாகும். உலகப் பெரும் போர்கள் இரண்டிலும், சுவிட்சர்லாந்தைப் போலச் சுவீடனும் நடுநிலைமை மேற்கொண்டது. முதலாளித்துவம், அபேத வாதம் ஆகிய இரண்டுக் கும் நடுவழியான ஒரு பொருளாதார அமைப்பும் சுவீடனில் பொருந்தியுள்ளது. இக் காரணங்களால் இந்த நாட்டுக்கு நடுவழி நாடு (The Country of the Middle Way ) என்ற பெயருண்டு. கள்ள வாணிகம் (Black Market) என்பதே இல்லாத நாடு ஒன்று உலகில் இருக்கிறது என்றால், அது சுவீடனேயாம்! இத்தகைய சுவீடனைப்பற்றி நாம் அறிந்து கொள் வது இன்றியமையாததாகும். . நிலப்பரப்பும் மக்களும் சென்னை மாகரணமும் சுவீடனும் நிலப்பரப் பில் பெரும்பாலும் ஒத்தவையாகும். ஆனால் சுவீ டனில் பாதிக்குமேல் காடுகள் நிரம்பியுள்ளன். மேலும், ஒரு லட்சம் ஏரிகளும், பல மலைகளும், பற் பல ஆறுகளும் அங்கே உள்ளன. சுவீடனில் 70 லட்சம் மக்கள் இருக்கின்றனர்.அதாவது, மைசூர் சமஸ்தானத்தைக் காட்டிலும், குறைவான அளவு மக்களே சுவீடனில் உண்டு. சுவீடனில் ஆடவர், பெண்டிரின் விகிதம் முறையே 10:11.
பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/19
Appearance