உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குயின் எலிசபத் 89 லண்டன் நகரின் புகழ்பெற்ற பெரிய கடைகள் (Department Stores)* நான்கின் கிளைகள் இக்கப் பலில் நிறுவப்பட்டுள்ளன. அவைகளிற் புத்தகங் களும் வானொலிக் கருவிகளும் பிரயாணத்திற்கு இன்றியமையாத பொருள்களும் விற்கப்படு கின்றன. க்கடைகளில் பொருள்கள் வாங்கும்போதும், மேனாட்டார் வரிசைமுறையில் ஒருவர்பின் ஒருவராய் நின்று, ஆரவாரமின்றி வாங்கியது எனக்கு வியப் பைத் தந்தது. அவர்களுடைய கட்டுப்பாட்டுக்கு மேலும் சில எடுத்துக்காட்டுக்கள் கூறலாம். கப்ப லில் ஏறிய நாளில், முதல் பந்தியில் உணவு உட் கொண்டவர்கள், நாள்தோறும் முதல் பந்தியி லேயே உண்பர்; அன்று இரண்டாவது பந்தியில் உண்டவர், பின்னரும் இரண்டாவது பந்தியிலேயே உண்பர்; உணவருந்த அமரும் இடத்திலும் மாறு தல் செய்யார். மிதக்கும் அரண்மனை க மருத்துவர்களும் நர்சுகளும் ரணசிகிச்சை செய்யுமிடமும், பல் வைத்தியப் பகுதியும், தொத்து நோய்களைக் குணப்படுத்தத் தனி அறைகளும், எக்ஸ்ரே சிகிச்சை வசதியுமுடைய பெரிய மருத்து வச் சாலையும் புது முறைகளில் முடிதிருத்தும் நிலை யங்களும், மின்சார உதவிகொண்டு பலவகை உணவுகளைத் தயாரிக்கும் இயந்திரங்களும்; அவற்றைக் குளிர்ந்த நிலையிலும் சூடான நிலையிலும் வைத்திருக்கும் தன்மை பொருந்திய

  • டிப்பார்ட்மெண்டு ஸ்டோர்ஸ் என்பன பொருள்களின்

பலவகைகட்குத் தனித்தனிப் பகுதிகள் உள்ள மிகப் பெரிய கடைகள். ம்