உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குயின் எலிசபத் 41. யான மின்சாரத்தைச் செலவிடும் குயின் எலிசபத் தில் இரு பெரிய மின்சார நிலையங்கள் (Power Stations) இருப்பதால், இதை மின்சாரக் கப்பல் என்றும் அழைக்கலாம். எண்ணெயில் ஓடுங் கப்பல் இக் கப்பலின் தண்ணீர் டாங்கும் மிகமிகப் பெரியது. இக் கப்பலின் இயந்திரத்துக்கு மணிக்கு 600 டன் தண்ணீர் வேண்டுமாம். பெரும்பாலான கப்பல்கள் நிலக்கரியில் செல்லுவனவே; ஆனால், குயின் எலிசபத் எண்ணெயில் ஒடுங் 160,000 குதிரைப் பவருள்ள இயந்திரத்தையுடைய இக் கப்பல், பல நூறு டன்கள் எண்ணெய் கொள் ளும் டாங்கைத் தன்னகத்தே கொண்டது. ராடார் கப்பல். மிகுதியான மூடுபனியிலும் 50 மைல் தொலைவு வரை வழி தெளிவாகத் தெரிய உதவியளிக்கும் நாடார் (Radar) என்னும் செயற்கைக் கண் போன்ற கருவி இக் கப்பலில் இருப்பதால், எவ்வித இருட்டும் பெரு மழையும் இக் கப்பலின் பிரயா ணத்தைத் தடைப் படுத்துவதில்லை. ராடார் என் பது வானொலியால் திசையறிய உதவுவது. ஆகாயத் திலுள்ள விமானங்கள் அல்லது கடலிலுள்ள கப் பல்களின் உதவியின்றியே, இது அவற்றின் திசை யையும் இருப்பிடத்தையும் அறியும் ஆற்றல் வாய்ந் தது.சந்திரன், செவ்வாய் முதலிய கோளங்களுக் குச் செய்தியனுப்பிப் பதிலைப் பெறவும் ராடார் பயன்படுகிறது. வாணிகத்துக்காகப் பெருங் கடல் களில் மீன் பிடிக்கவும் ராடார் உதவுகிறது.