குயின் எலிச்பத் 43 ஆகியோர். ரஷ்ய வெளிநாட்டமைச்சராயிருந்த மாலதோவ் இக்கப்பலில் தாம் சென்றபோது, சில வினாடிநேரம் இக் கப்பலை ஓட்டி மகிழ்ந்தனராம். ஒரு முறை ஒரு பிரயாணி இக்கப்பலில் ஒரு குழந் தையைப் பெற்றெடுத்தாளாம். அவள் அக் குழந் தைக்கு இக் கப்பலின் பெயரையே இட்டாளாம். நான் ஆறு நாட்கள் இக் கப்பலிலிருந்தும் இதன் எல்லாப் பகுதிகளையும் பார்க்க என்னால் இயலவில்லை. நல்ல வேளையாக இக் கப்பலில் ஏறி யவுடன் இதைப்பற்றிய படங்களுள்ள விளக்கமான புத்தகம் ஒன்றைக் கப்பல் அதிகாரிகள் தந்தனர். அஃதின்றேல், கப்பலுக்குள் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்துக்குப் போக வழி தெரியாமல் துன்பப்பட்டிருப்பேன். அறைகளின் அமைப்பு . முதல் வகுப்பு அறை ஒவ்வொன்றுக்கும் நீராடும் அறை ஒன்றும், டெலிபோன் ஒன்றும், மின்சார விசிறி ஒன்றும்,கவலையின்றி உறங்குவ தற்கான எல்லா வசதிகளும், நாற்காலிகளும் மேசைகளும், பெரிய கடிகாரம் ஒன்றும் இருக்கின் றன. அட்லாண்டிக் பெருங் கடலைக் கடக்கும் போது ஏற்படும் (லண்டனுக்கும் நியூயார்க்குக்கும் உள்ள) 5 மணி நேர வேறுபாட்டைப் பல பகுதிக ளாகப் பிரித்து, நாள்தோறும் சிறிது சிறிதாக மாற்றுகின்றனர். கப்பலின் இயந்திரங்களுள்ள அறையிலிருந்து நேரத்தை மாற்றியவுடன், எல்லா அறைகளிலுமுள்ள கடிகாரங்களின் நேரமும் தானே மாறும்படி மின்சாரமூலம் இவை அமைக் கப்பட்டிருக்கின்றன. 88-4
பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/49
Appearance