உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குயின் எலிசபத் ஆபத்துக் காலத்தில் உதவி 45 கப்பலுக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால், பிரயாணிகள் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும்? எந்த வழியாக வெளியேறவேண்டும்? நீரில் உயி ரைக் காப்பாற்றிக்கொள்ள 'லைப் - பெல்ட்' என்ற கருவியை எவ்வாறு உடலில் அணியவேண்டும்? என்பவைகளைப் பிரயாணிகட்கு அறிவிக்க, எல் லாக் கப்பலகளிலும் வாரம் ஒரு முறையாவது பயிற்சி (Drill) நடத்தவேண்டுமென்பது கப்பல் சட்டங்களில் ஒன்று. இக் கப்பலின் மாலுமிகள் இப் பயிற்சியை இரண்டு நாட்களில் நிகழ்த்தி எல்லாவற்றையும் விளக்கமாகக் கூறி, ஒத்திகை யைச் செவ்வையாக நடத்திக் காட்டினர். வானொலி நிலையம் நடை இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் பெறும் வானொலி நிகழ்ச்சிகளை இக் இக் கப்பலில் அஞ்சல் செய்கின்றனர். இக் கப்பலில் நடைபெறும் நிகழ்ச்சிகளை அந் நாடுகளின் வானொலி நிலையங் கள் அஞ்சல் செய்யவும் தக்கபடி இக் கப்பலில் வானொலி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கப்பலின் பெயர்க் காரணம் புகழ் பெற்ற கப்பல்களுக்கு அவ்வந்நாட்டுப் பெரியார்களின் பெயரிடுதல் மரபு. அமெரிக் கர் தங்கள் கப்பல் ஒன்றுக்கு ரூஸ்வெல்ட் என்றும், மற்றொன்றுக்கு வாஷிங்டன் என்றும் பெயரிட்டுள்ளனர். கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரம் பிள்ளை பெயரால், 1949 பிப்ரவரி யில் நம் நாட்டில் ஒரு கப்பல் மிதக்க விடப்பட்டதை நாம் அறிவோம். இங்கிலாந்தின்