குயின் எலிசபத் 47 செய்தது. இஃது அந்த ஆறு ஆண்டுகளில் 8,11,000 போர் வீரர்களை மறைவாகப் பல இடங் களுக்குக் கொண்டுபோக 5,00,000 மைல்கள் பிரயாணம் செய்தது. இக் கப்பலை மூழ்கச் செய்யும் ஜெர்மன் நீர் மூழ்கிக் கப்பலின் (U Boat) மாலுமி களுக்கு 10,00,000 ரூபாய் பரிசு அளிப்பதாக ஹிட்லர் வாக்குறுதி கொடுத்திருந்தாராம். போர் முடிந்ததும் மீண்டும் உல்லாசக் கப்ப லாகத் திருத்தி அமைக்கப்பட்டு, 1946 முதல் இங்கி லாந்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இக் கப்பல் ஓடிக்கொண்டிருக்கிறது. வருத்தமும் மகிழ்ச்சியும் மிகப் பெரிய உருவமுள்ள கப்பலாயிருந்தமை யால், இது செல்லும்போது மெல்லச் சென்றதா கவே எனக்குத் தோன்றிற்று. ஒருவருக்கும் சோர்வு தோன்றவில்லை. ஆறாம் நாள் கப்பலை விட்டு இறங்கவேண்டிய நேரம் வந்தபோது, வருத் தப்படாதவர் யாரும் இல்லை. ஆனால், ஹட்சன் ஆற்றின் இரு மருங்குகளிலும் கப்பல்களும் இடையே சுதந்திரச் சிலையும், அவற்றிற்குப் பின்னே வானளாவும் கட்டிடங்களுமுள்ள யார்க் நகரமென் றழைக்கப்படும் இந்திர லோகம் (இயந்திரலோகம்) எதிரே தெரிந்தபோது, அதைப் பார்க்கவும், அமெரிக்காவின் சுதந்திர மண்ணில் மிதிக்கவும் விரும்பாதாரும் இருக்கமுடியுமா? சிறந்த நினைவுச் சின்னம் நியூ குயின் எலிசபத் ஒரு கப்பல் மட்டு மன்று; சூரியன் மறைதல் இல்லாத பேர ரசை ஏற்படுத்தியதற்கும், இரு பெரும் போர் களிலும் இங்கிலாந்து முடிவில் வெற்றி ரு
பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/53
Appearance