உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.56 நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள் ஆசிரியர்களுடனும், 5000 மாணவிகளுட்பட 25,000 மாணவர்களுடனும், 13 கோடி ரூபாய் மூலதனத் தோடும் விளங்குகின்றது. இது அமெரிக்காவில் இப்போது உள்ள தலை சிறந்த பல்கலைக் கழகங் களுள் ஒன்றாகும். பல் வைத்தியம், மிருக வைத்தி யம், சட்டக் கல்வி, பொறியியற்கலை, விமானக் கல்வி, வானிலை ஆராய்ச்சிக் கல்வி, பத்திரிகைக் கல்வி போன்ற 50 பிரிவுகள் இங்கு உண்டு. ஓரளவு மாணவர் பொறியியற் கலை பயிலும் காட்சி ஆராய்ச்சி செய்தபின்புதான் பட்டங்கள் வழங்கப் படும். ஏனைய அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள்