உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள் 1. லண்டன் நான் பம்பாயிலிருந்து நேரே லண்டனுக்குப் பறந்தேன். அதற்குமுன் நான் இந்தியாவுக்கு வெளியே, கடாரத்துக்கும்* இலங்கைக்குமே சென் றிருந்தேன்; ஆதலால், லண்டனில் நான் பார்த் தவையெல்லாம் எனக்குப் புதுமையா யிருந்தன. அவை என் உள்ளத்தைக் கவர்ந்தன. இப்போது, பல ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் சுற்றுப்பிரயாணம் செய்த பின்னர், லண்டன் என்றவுடன், பிக்காடில்லி சர்க்கஸ், ஹைட் பார்க், பிரிட்டிஷ் மக்கள், பாதாள ரயில்வே, லண்டன் போலீஸ்- இவைகளே என் நினைவுக்கு வருகின் றன. துதான் பிரிட்டன் தமிழ்நாட்டுக்கு நிகரான நிலப்பரப்பு ஒரு தீவு, சென்னை மாகாணத்தின் மக்கள் தொகை, பாராளு மன்றம், சிறந்த நீதி மன்றங்கள், உலகத்துப் பேரறிஞர் பலருக்குக் கல்வி கற்பிக்கும் பல்கலைக் கழகங்கள், இரும்பு, எஃகு, கப்பல் கட்டும் தளங்கள், மாட்சிமை தங்கிய மன்னர்பிரான், மிஸ்டர் வின்ஸ்டன் சர்ச்சில், 'பஞ்ச்' பத்திரிகை - இவை தாம் பிரிட்டன்.

  • கடாரம் - பர்மா,

-