உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹோனதூலூ நினைவுகள் 69. (Mandated Territories), செட்டில்மெண்டுகள் (Settlements), இருநாடுகளால் பொதுவாக ஆளப் படும் பூமி என்ற பல வகையான ஆட்சிமுறைகளை யுடைய காட்சிச் சாலையாய் அமைந்திருப்பதும் அந்தப் பசிபிக்கேயாகும். பவளமலைகளும், 8000 அடிவரை உயரமுள்ள நிலப்பரப்பும், அதிகமழை யும், எரிமலைகளும் அங்கே உண்டு. நில நடுக்கோட் டின் (Equator) அருகில் பசிபிக்கின் அகலம் 10,000. மைல் உள்ளது. இன்று உலகின் இரு பெரும் வல் லரசுகளாயுள்ள அமெரிக்காவையும் ரஷ்யாவையும் இணைப்பது (அல்லது பிரிப்பதும் பசிபிக்கேயாகும். சர்வதேச நாள் மாறும் எல்லையும் Inter - national Date Line) பசிபிக்கிலேயே இருக்கும் போது, பசிபிக்குக்கு ஈடான பெருங்கடல் எவ்விதம் இருக்க முடியும்? 180 டிகிரி நெடுக்குத் தொலை (Longitude)க்கு இரு புறமும் 24 மணி நேர வேறு பாடு உண்டு. ஞாயிற்றுக்கிழமை இரவு கிழக்கி லிருந்து மேற்கே செல்லுபவர் மறுநாள் காலையில் எழுந்தால், மீண்டும் ஞாயிற்றுக்கிழமை உதய மாகும். அதே நேரத்தில் எதிர்வரிசையில் வருபவர் திங்கட்கிழமை காலையில் துயில் எழுவதற்குப் பதி லாகச் செவ்வாய்க்கிழமை காலையில் துயில் எழுவர்! ஹோனலூலூவின் பெயர்கள் இத்தகைய பசிபிக்கில், தனது பூகோள் அமைப்பால் முதன்மை பெற்றுப் போர்க் காலத் தில் தலைமையிடமாகவும், சமாதான காலத்தில் ஆஸ்திரேலியா, ஆசியா, அமெரிக்கா ஆகிய மூன்று கண்டங்களையும் இணைக்கும் கப்பல் கள், ஆகாய விமானங்கள் இவற்றின் போக்கு வரவுக்கு இன்றியமையாத டமாகவும்