உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. உயிர்க்காட்சிகளும் பொருட்காட்சிகளும் நான் சென்ற எல்லாப் பெரிய நகரங்களிலும், ஆங்காங்குள்ள சிறந்த உயிர்க்காட்சிச்சாலைக்கும் பொருட் காட்சிச் சாலைக்கும் சென்றேன். உயிர்க்காட்சிச் சாலைகள்* இவ்வாறு நான் கண்டின்புற்ற உயிர்க்காட்சிச் சாலைகளுள் குறிப்பிடத்தக்கவை:---ஸ்டாக்ஹோம், ரிக், லண்டன், சான்பிரான்சிஸ்கோ, சிட்னி ஆகிய நகரங்களிலுள்ளவைகளே. பொதுவாக, வெளிநாடுகளிலுள்ள உயிர்க் காட்சிச்சாலைகளைப் பற்றிக் கூறியபின்னர், மேற்குறித்த ஐந்தின் சிறப்பியல்புகளையும் தனித்தனியே கூறுவேன், உயிர்க்காட்சிகளும் மக்கள் ஆர்வமும் . நாள்தோறும், பல்லாயிர மக்கள் வெளிநாடு களில் இங்குள்ள உயிரினங்களைப் பார்க்கச் செல்லுகின்றனர். உயிர்க்காட்சிச்சாலையைக் கடற் கரை அல்லது மலைப்பகுதி போன்று, ஓய்வு பெறும் ஓர் உல்லாச இடமாகக் கருதுவதும் மேலை நாட்டவரின் இயல்பாகும். நம் நாட்டுப்புறத்து மக்களைப்போல - நாய், பூனை தவிர- வேறு உயி ரினங்களை நாள்தோறும் பார்க்கும் வாய்ப்புப் பிற உயிர் என்பது இங்கே விலங்கு, பறவை முதலிய உயிர்ப் பொருள்கள்.