உயிர்க்காட்சிகளும் பொருட்காட்சிகளும் எல்லாச்சாலைகளும் நகருக்கு வெளியே அமைதி யான பகுதிகளில், ஒரு குன்றின்மீதாவது, பூங்கா வனத்தின் நடுவிலாவது, ஆற்றங்கரைக்கு அருகிலா வது ஒரு தீவிலாவது அமைக்கப்பட்டுள்ளன. மீன் காட்சிச்சாலையும் இவ்வுயிர்க்காட்சிச்சாலையின் ஒரு பகுதியாக உள்ளது. சில உயிர்க்காட்சிச்சாலைகளில் பலவகை அரிய செடி, கொடி மரங்களைக் கொண்ட காட்சிச்சாலையும் இருக்கிறது. உயிரினங்களுக்கு உணவளித்தல் பிறநாட்டு உயிர்க்காட்சிச்சாலைகளில், எந்த உயிரினத்துக்கும் பார்வையாளர் உணவு கொடுக்க லாம். ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஏற்ற உணவு, சாலைகளுக்குள்ளேயே ஆங்காங்குச் சிறு கடைக ளில் விற்கப்படும். மிகப்பலர் இவ்வுணவுகளை விலை கொடுத்து வாங்கி அந்த உயிர்களுக்கு அளிப்பர். ஒவ்வொரு உயிரினத்துக்கும் உயிர்க்காட்சிச்சாலை யார் உணவு கொடுக்கும் நேரம், அதனதன் அருகே குறிப்பிடப்பட்டிருக்கும். அ த நேரத்துக்குக் காத்திருந்து, அவை உணவு உட்கொள்வதைக் கூர்ந்து கவனிப்பதிலும் அக்காட்சிகளைப் புகைப் படம் எடுப்பதிலும் பவர் களிப்படைவர். ஸ்டாக்ஹோம் . தனித்தனிக் காட்சிச் சாலைகளைப்பற்றி இனிச் சில கூறுவேன். சுவீடனின் தலைநகரான ஸ்டாக் ஹோமிலுள்ள உயிர்க்காட்சிச்சாலை ஏனைய வற்றைப் போன்றதன்று. இது ஒரு மலைமீது திறந்த வெளியில் உள்ளது. மாதந்தோறும் இருநாறாயிரம் பார்வையாளர் இங்கே
பக்கம்:நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்.pdf/99
Appearance